July 27, 2024
  • July 27, 2024
Breaking News
June 30, 2018

ஜூலை 20 முதல் 68 லட்சம் லாரிகள் ஓடாது..!

By 0 918 Views

தென் மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வரும் ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா கூறியதிலிருந்து…

“சுங்கச் சாவடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும். நாடு முழுவதும் இயங்கும் 68 லட்சம் லாரிகளுக்கு ஒரு லாரிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் நாங்கள் செலுத்துவதாக கூறுகிறோம். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் உள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும் மத்திய அரசு எங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இதனால் ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தைத் தொடங்க இருக்கிறோம்.

20-ந்தேதி முதல் 68 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் அரசுக்கு தினமும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதன் மூலம் தமிழகத்துக்கு ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும்.

கடந்த முறை போலில்லாமல் இந்த முறை எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு நிறைவேற்றும் வரை ஸ்டிரைக்கை கைவிடப் போவதில்லை..!”