சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்க, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 8 வழிச்சாலை அமைப்பது அவசியம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.
பழனியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவரது பேச்சிலிருந்து…
“அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம் போல சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.. எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். ஆனால், இதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.
8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும்..!”