July 1, 2025
  • July 1, 2025

ஜுங்கா விமர்சனம்

by on July 28, 2018 0

கோலிவுட்டில் ‘ஹாரர் ஜேனர்’ என்கிற ஆவி பறக்கும் கதைகள் ஓய்ந்து இது ‘டான்’கள் டாலடிக்கும் (டாவடிக்கும்..?) ‘டார்க் காமெடி’ சீசன். அதில் சின்னதாய் ‘சூது கவ்வும்’ படத்தில் வெற்றியைக் கவ்வி விட்ட மகிழ்ச்சியில் ‘பெரிசாய்’ பண்ண விஜய் சேதுபதி ஆசைப்பட்டிருக்கும் ‘படா’ படம் இது. பொள்ளாச்சியில் தானுண்டு தன் கண்டக்டர் வேலை உண்டு என்று ஜாலியாக ஒரு தெலுங்குப் பெண்ணை டாவடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு அந்தப் பெண்ணாலேயே ஒரு சண்டையில் பராக்கிரமத்தைக் காட்ட வேண்டிவர, அதனால் […]

Read More

அப்துல் கலாம் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் – டிடிவி தினகரன்

by on July 27, 2018 0

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் சென்றார். அங்கு அப்துல்கலாமின் அண்ணன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த தினகரன் அங்கு ஊடகங்களிடம் பேசியதிலிருந்து… “அப்துல்கலாம் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவரது நினைவிடத்தில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அவரது இந்த நினைவு நாளில் மாணவர்கள் இந்தியாவை […]

Read More

கோலமாவு கோகிலா வெளியீடு பற்றி இயக்குநர் நெல்சன்

by on July 26, 2018 0

ஒரு ஹீரோவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ஒரு ஹீரோயினுக்கு இல்லாத தமிழ்ப்பட உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ‘ஒன் அன்ட் ஒன்லி’ நயன்தாரா மட்டுமே. இன்றைக்கு ஒரு ஹீரோ படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படி நயன்தாரா முதன்மைப் பாத்திரமேற்கும் ‘கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டை ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா வர்த்தகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 17ஆம் தேதி பட வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்த […]

Read More

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி வருகிறது

by on July 25, 2018 0

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே, அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க கோரிக்கை விடப்பட்ட நிலையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநிலக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். “ஆங்கில வழிக் கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு […]

Read More

தமிழின் முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து வரும் புதிய வீடியோ சேவை VIU

by on July 25, 2018 0

வளர்ந்து வரும் தொழில்நுட்பப் புரட்சியில் இனி கேளிக்கைகளுக்குப் பஞ்சமேயில்லை. அது சினிமாவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சாடிலைட் சானல்கள் தாண்டி இப்போது வீடியோ சேவையும் கலந்துகட்டி ரசிகர்களைக் கண்ணி போட்டு இழுத்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் காணத்தான் கண்கள் கோடி வேண்டும். அந்த வரிசையில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தலைமையகத்தை கொண்டு, இந்தியா, தென் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆன் டிமாண்ட் சேவையை வழங்கும் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மீடியா நிறுவனமான Vuclip, […]

Read More

கொலைகாரனாகத் தயாராகும் விஜய் ஆன்டனி..

by on July 25, 2018 0

சினிமாவில் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சென்டிமென்ட்களில் ஒன்று நெகடிவ்வாக தலைப்புகள் வைக்கக் கூடாதென்பது. அதை உடைத்துக் காட்டியவர் விஜய் ஆன்டனி. எதெல்லாம் கூடாது என்றார்களோ அதை வைத்தே வென்றவர். ‘பிச்சைக்காரன்’, ‘எமன்’ என்றெல்லாம் தலைப்பு வைத்து வெற்றி பெற்றவர் அதே வரிசையில் இப்போது ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் படம் ‘கொலைகாரன்’. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் ஆன்டனியுடன் இணைந்து ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கிறார். இப்படத்தை […]

Read More

உழவர்களுக்கு ஒரு கோடி கொடுத்தது ஏன்..? – சூர்யா விளக்கம்

by on July 24, 2018 0

‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மற்றும்  , நடிகர் கார்த்தி , 2D ராஜ் கர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமன் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு […]

Read More
CLOSE
CLOSE