July 1, 2025
  • July 1, 2025

60 வயது மாநிறம் திரைப்பட விமர்சனம்

by on September 3, 2018 0

பல படங்கள் சினிமாவை நம்பியிருப்பவர்களை வாழவைக்கும். சில படங்கள் மட்டுமே சினிமாவை வாழ வைக்கும். அந்த வரிசையில் இந்தப்படத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு எத்தனை மேன்மையானது என்பதை தனக்கே உரிய ‘கிளாஸிக் டச்’ கொடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். அதைத் தோள் கொடுத்துத் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள் கதையின் நாயகனாகியிருக்கும் பிரகாஷ்ராஜும், துணிந்து இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் கலைப்புலி எஸ்.தாணுவும். அம்மா புற்றுநோயால் இறந்துவிட, அன்பைப்பொழிந்து வளர்ந்த அப்பாவும் ‘அல்சைமர்’ என்னும் மறதிக்குறைபாட்டால் அவதிப்பட, அவரை […]

Read More

எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க கருணாநிதி, ஜெயலலிதா வேடங்களுக்குத் தேர்வு நடக்கிறது

by on September 2, 2018 0

கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு […]

Read More

யார் மீதும் எனக்கு பயமோ, பொறாமையோ கிடையாது – சிவகார்த்திகேயன்

by on September 2, 2018 0

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக சிவகார்த்திகேயனும், இயக்குநர் பொன்ராமும் மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா ஏற்கனவே அறிவித்தபடியே விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லர் […]

Read More

ஹீரோக்களின் சுமையை உணர்கிறேன் – சமந்தா அக்கினேனி

by on September 1, 2018 0

கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் இப்போது தமிழிலும், தெலுங்கிலும் வெளியாவது தெரிந்த விஷயமாக இருக்கலாம். தெரியாத சில விஷயங்களுக்கு கீழே வாருங்கள். கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘சமந்தா அக்கினேனி’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு […]

Read More

விஜய் சேதுபதி த்ரிஷா நடிக்கும் 96 விரைவில் வெளியாகிறது

by on August 31, 2018 0

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘96 என்ற படத்தை தயாரித்திருக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார் . மற்றும் ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம் இசை – கோவிந்த் மேனன் எடிட்டிங் – கோவிந்தராஜ் கலை […]

Read More

ஒரே படத்தில் தமிழுக்கு வரும் அமிதாப்… இந்திக்குப் போகும் எஸ்.ஜே.சூர்யா

by on August 31, 2018 0

‘திருச்செந்தூர் முருகன் புரடக்‌ஷன்ஸ்’ சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ‘ஃபைவ் எலிமென்ட்ஸ் பிக்சர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் மிக பிரமாண்டமான படத்துக்கு “உயர்ந்த மனிதன்” என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்தப்படத்தின் சிறப்பம்சமே இதில் இந்திய பட உலகின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ‘அமிதாப் பச்சன்’ முதல்முறையாக தமிழில் நடிப்பது. அவருடன் இந்தப்படத்தின் இணைந்து நடிப்பது எஸ்.ஜே.சூர்யா. இதே படத்தின் மூலம் இந்தியில் பிரவேசிக்கீறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க பட உள்ளது. […]

Read More

ஆடத் தெரிந்த பிரபுதேவாவை இயக்கும் ஆட்டக்காரர்

by on August 30, 2018 0

‘தூத்துக்குடி’ மற்றும் ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘தேள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘நெடுஞ்சாலை’ உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பொன் பார்த்திபன் மற்றும் […]

Read More

நீட் தேர்வு விவகாரம் – சி.பி.எஸ்.சி க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

by on August 30, 2018 0

நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை தொடர்ந்து விசாரித்தது. இதற்கிடையே, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. […]

Read More

மக்கள் நல இயக்கம் அரசியலுக்காக அல்ல – கொடியை அறிமுகம் செய்து பேசிய விஷால்

by on August 29, 2018 0

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் நூறாவது நாளான இன்று தன்னுடைய பிறந்தநாளையும் ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களின் முன்னிலையில் தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றினார். அத்துடன் மக்கள் நல இயக்கத்துக்கான கொடியையும் அறிமுகம் செய்து உரையாற்றினார் விஷால். அதிலிருந்து… “உங்களில் ஒருவனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல – உங்களுடைய வெற்றி. நடிகனாக நன்றாக சம்பாதித்து நாமும்,நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்று […]

Read More
CLOSE
CLOSE