January 15, 2025
  • January 15, 2025

கர்நாடகா – நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

by on May 25, 2018 0

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். மந்திரி சபையில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் உள்ளிட்டு மந்திரிகள் பதவியேற்க உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், குமாரசாமி […]

Read More

ஒரு குப்பைக் கதை விமர்சனம்

by on May 25, 2018 0

ஒன்றுக்கும் உதவாத கதையை குப்பைக்கதை என்பார்கள். ஆனால், அதையே தலைப்பில் வைத்ததற்கு இயக்குநர் காளி ரங்கசாமிக்கு அபார தன்னம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அந்தக் கதையின் மேல் அவருக்கு இருக்கும் அசராத நம்பிக்கைதான் அந்த தைரியத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது. அப்படி என்ன கதை..? சென்னையின் குப்பத்தில் தாயுடன் வசிக்கும் துப்புறவுத் தொழிலாளராக இருக்கும் தினேஷுக்குப் பெண் பார்க்கிறார்கள். அவரது பணியைக் காரணம் காட்டியே பெண் அமையாமல் போக, வெளியூரில் மனீஷா யாதவைப் பார்த்துப் பேசி முடிக்கிறார்கள். ஆனால், தினேஷ் […]

Read More

தூத்துக்குடி துயரம் கருதி சாமி 2 டிரைலர் வெளியீடு தள்ளிவைப்பு

by on May 25, 2018 0

சமீபத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தோர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காக்கிச் சட்டையில் ரத்தக்கறை பட்ட அந்த நிகழ்வுக்கு அரசியல் மட்டுமல்லாமல் பல துறை சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க வேலைகள் கனஜோராக நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக நாளை (26 மே) அன்று படத்தின் டிரைலர் வெளியீடு நடைபெறுவதாக இருந்தது. காக்கிச் சட்டையின் […]

Read More

முதல்வர் துணை முதல்வர் பதவி விலக வேண்டும் – கமல்

by on May 24, 2018 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், அரசு தரப்பில் யாரும் தூத்துக்குடி மக்களைச் சந்திக்காத்தைக் குற்றம் சாட்டினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்துக் கேள்வி எழுந்தபோது, “இந்தப் பதவிநீக்கம் போதாது, மேலே இருக்கும் […]

Read More

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் வினியோகம் துண்டிப்பு

by on May 24, 2018 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையில், இன்று முதல் ஸ்டெர்லைட்டுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஊர்வலமாக சென்ற பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது கலவரமாக மாறியபோது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் பத்து பேர் சம்பவ இடங்களிலேயே பலியாக, […]

Read More

நான் பப்ளிசிட்டிக்காக என் ரசிகருக்கு போஸ்டர் ஒட்டலை – சிம்பு

by on May 22, 2018 0

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாகக் கருதப்படும் விஷாலும், சிம்புவும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அதிசயம் சென்னையில் நடந்தது. சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘எழுமின்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் விஜி. விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் […]

Read More

நிபா வைரஸ் தாக்கி கேரளாவில் 3 பேர் பலி… தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை

by on May 21, 2018 0

பொதுவாக வவ்வால்களின் சிறுநீர், உமிழ்நீரிலிருந்து உருவாகும் உயிர் கொல்லியான ‘நிபா வைரஸ்’ 1998-99ம் ஆண்டுகளில் பன்றிகளில் உருவாகி அதன்பிறகு மற்ற விலங்குகளுக்கு வந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோயாக மாறியுள்ளது. இந்த வைரஸின் அச்சம் இப்போது இந்தியாவில்… குறிப்பாக கேரளாவில் பரவியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இதுவரை ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை மூன்றுபேர் உயிரிழந்துளார்கள். இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ‘நிபா’ வைரஸ் பரவியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

Read More

குமாரசாமி பதவி ஏற்பில் கலந்து கொள்ளும் அர்விந்த் கெஜ்ரிவால்

by on May 21, 2018 0

கர்நாடகாவில் வரும் 23-ந்தேதி புதனன்று மாநில முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளது தெரிந்த விஷயம். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஆட்சி அமைய உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற […]

Read More

ரஜினி முதல்வரானால் நீட் முதல் நியூட்ரினோ வரை தீர்வு – தமிழருவி மணியன்

by on May 20, 2018 0

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ரஜினியின் அரசியல் வாழ்வில் முக்கிய பங்காற்றுவது தெரிந்த விஷயம்தான். அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் ரஜினி மக்கள் மன்றத்தினரைக் கூட்டி ஆலோசனைகளை ரஜினி மேற்கொண்டிருக்க,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது… “ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்குத் தயாராகி […]

Read More
CLOSE
CLOSE