January 16, 2025
  • January 16, 2025

நடிகர் தினேஷுக்கு மாமியாரானார் தேவயானி..!

by on September 8, 2018 0

திரையுலகில் நடிக நடிகையருக்கு சில கொள்கைகள் இருக்கும். உதாரணத்துக்கு ராஜ்கிரண் எத்தனைக் கோடிகள் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டார். அதேபோல் தேவயானியும் அம்மா, மாமியார் ரோல்களை ஏற்பதில்லை என்று உறுதியுடன் இருந்து அப்படி வந்த பல வேடங்களை ஒதுக்கி வந்தார். இப்போது முதல்முறையாக தன் கொள்கையைத் தளர்த்திக் கொண்டிருக்கிறார் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்துக்காக. இதில் நாயகன் தினேஷுக்கு மாமியாராக நடிக்கிறார் தேவயானி. ‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் […]

Read More

வஞ்சகர் உலகம் விமர்சனம்

by on September 8, 2018 0

ஒரு வெளிநாட்டுக்காரரிடம் நம்ம ஊர் ஃபுல் மீல்ஸை வைத்தால் அவர் எப்படி சாப்பிடுவார்..? ரசத்தை முதலில் ஊற்றி சாப்பிட்டு விட்டு பிறகு மோர்சாதம், சாம்பார் சாதம் என்று சாப்பிடக்கூடும் இல்லையா..? அப்படிதான் ஆகிறது நம்ம ஊருக்குக் கதை எழுதும்போது ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதை எழுதினால். அப்படி நியூயார்க் பிலிம் அகாடமியில் பயின்று அமெரிக்கப் படங்கள் போல புதுமாதிரி கதை சொல்லலில் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா. எங்கோ ஆரம்பிக்கிற கதையில் நாயகன் சிபி புவனசந்திரன், எரிகின்ற […]

Read More

காக்கிவாடன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி

by on September 8, 2018 0

ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளி கொண்டாட சில உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு அபாயகரமான தொழிலாக இருக்கிறது பட்டாசு தயாரிக்கும் தொழில். அப்படி இன்று காலை சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்க, உள்ளே இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். புகை மூட்டத்தில் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை […]

Read More

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்

by on September 7, 2018 0

அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி விமான நிலையத்தில் இன்று (07-09-2018) பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் பல தரப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதிலிருந்து… குட்கா ஊழல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், “எங்களுக்கு மடியில் கனமில்லை… வழியில் பயமில்லை…” என்று கூறியிருக்கிறார். இது ஆரம்ப கட்ட விசாரணை என்பதால் அவர் ராஜினாமா செய்ய அவசியமில்லை. மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு பெட்ரோல் டீசல் […]

Read More

தொட்ரா விமர்சனம்

by on September 7, 2018 0

இந்த நாகரிக உலகில்கூட இன்னும் தமிழ்நாட்டளவில் விரவிக் கிடக்கும் சாதீய உணர்வுகளையும், அதன் காரணமாக காதலில் விளையும் ஆணவப் படுகொலைகளையும் அப்பட்டமாக சுட்டிக் காட்டும் படம். அதிலும் நாம் சமீப காலங்களில் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஆணவக் கொலைக்கு ஆளான காதல்களைக் கோர்த்து ஒரு திரைக்கதையை எழுதி பரபரப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ். நாயகனுக்கு ‘சங்கர்’ எனவும், நாயகிக்கு ‘திவ்யா’ எனவும் பெயர் வைத்திருப்பதிலும், முதல் காட்சியில் இதயத் துடிப்பு எகிற நாம் சமீபத்தில் பார்த்து […]

Read More

என்னை எமோஷனல் பிளாக் மெயில் செய்த இயக்குநர் – அனுராக் காஷ்யப்

by on September 7, 2018 0

ரிலீஸ் ஆகிஒருவாரம் ஆகியும், ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’.இந்த வெற்றியைக் கொடுத்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை நடத்தினார் படத்தின் தயாரிப்பாளரான கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார். அதிலிருந்து… தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார் – “பல பிரச்சினைகளை தாண்டி முதல் நாள் இரவுக் காட்சியில் தான் படம் ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் நல்ல வரவேற்புடன் 16 கோடி ரூபாய் வசூல் […]

Read More

குட்கா வழக்கில் ஐவர் கைது – 20ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

by on September 7, 2018 0

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் […]

Read More
CLOSE
CLOSE