April 29, 2024
  • April 29, 2024

கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை

by on April 1, 2018 0

கோவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோடை விடுமுறையில் அரசு பள்ளிகளைப் போல் தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர் கூறியதாவது… “மத்திய அரசின் ‘நீட்’ தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகளை மாணவர்கள் திறனுடன் சந்திக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுத்தேர்வு முடிந்தபின் மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு 4,000 மாணவர்களுக்குத் தனி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதல் […]

Read More

நான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை – ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல்

by on April 1, 2018 0

தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக 49-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மக்களின் பிரதிநியாக நானும் பங்கேற்பேன் என்று அறிவித்திருந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் இன்று போராட்டத்தில் பங்கேற்றார். அங்கு கமல் பேசியதிலிருந்து… “எனக்கென்று ஒரு கட்சி இருந்தாலும் தனி மனிதனாக இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கமல்ஹாசன். நடிகன் என்பதை விட நான் மனிதன் – நான் தமிழன். உங்களுககு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அநீதி வியாபாரப் பேராசையின் […]

Read More

புதன்கிழமை கோட்டை நோக்கி பேரணி – விஷால் அறிவிப்பு

by on March 31, 2018 0

தமிழ்த்திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தொடர்வது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (31-03-2018) நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பெப்சி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீ ராம் , இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு […]

Read More

கருணாநிதியை சந்திக்க மம்தா சென்னை வருகிறார்

by on March 30, 2018 0

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இரண்டுநாள் பயணமாக ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் சென்னை வர இருக்கிறார்.. அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதியையும், செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்த அணியில் இடம்பெறவும் தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் மம்தா சென்னை வர இருப்பதும், தி.மு.க. தலைவர்களைச் […]

Read More

பூமராங் படத்தில் அதர்வாவின் மூன்று முகப் போராட்டம்

by on March 30, 2018 0

ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் பூமராங் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக ‘ப்ரோஸ்தடிக்’ வகையில் மேக்கப் செய்து கொள்கிறாராம். இதற்காக ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் இப்படி ‘ப்ரோஸ்தடிக்’ மேக்கப்பால் புகழ்பெற்ற ‘ப்ரீத்திஷீல் சிங்’ மற்றும் ‘மார்க் ட்ராய் டிஸோசா’ வை அழைத்து வந்து அதர்வாவுக்கு மேக்கப் பஒட வைத்திருக்கும் ஆர்.கண்ணன் இது குறித்து கூறியது. “பூமராங்’கில் அதர்வாவின் […]

Read More

நடிப்பதற்கு நேரமில்லை – திவ்யா சத்யராஜ்

by on March 30, 2018 0

சத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது. இப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக தன் செய்தியாளர் மூலம் ஊடகங்களுக்கு மறுப்புச் செய்தி அனுப்பியிருக்கிறார் திவ்யா. “இயக்குநர் வடிவேல் அப்பாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறாரே அன்றி என்னை நடிக்க வைக்க அல்ல. […]

Read More

முதல் படமே மோகன்லாலுடன் – குதூகலத்தில் சாம் சிஎஸ்

by on March 30, 2018 0

விக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம். “விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக […]

Read More

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கமல் பங்கேற்பு

by on March 29, 2018 0

மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து… “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதாக அமைக்க முடியும். அப்படி இரு மாநிலத்தின் தண்ணீர் தேவைக்காக வாரியம் அமைப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்..!” என்றவர் காவிரி விவகாரம் தொடர்பான […]

Read More

இஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

by on March 29, 2018 0

தொலைத் தொடர்புக்கு உதவும் ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் மூலம் இதனை விண்ணில் ஏவுவதற்கான பணி முடுக்கி விடப்பட்டது. ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் நேற்று 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது. கவுன்ட் டவுன் முடிந்து இன்று (29-03-2018) மாலை 4.56 மணிக்கு ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ […]

Read More
CLOSE
CLOSE