January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • கல்வி
  • இஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
March 29, 2018

இஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

By 0 1133 Views

தொலைத் தொடர்புக்கு உதவும் ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் மூலம் இதனை விண்ணில் ஏவுவதற்கான பணி முடுக்கி விடப்பட்டது.

ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் நேற்று 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது.

கவுன்ட் டவுன் முடிந்து இன்று (29-03-2018) மாலை 4.56 மணிக்கு ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது..

அதன் தொடர்ச்சியாக ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இது இஸ்ரோவின் இன்னொரு சாதனையாகிறது.