January 19, 2025
  • January 19, 2025

இந்தியாவில் அதிக சம்பளம் – முதலிடம் சல்மான் கான்… ரஜினி 14வது இடம்… கமல் 71வது இடம்

by on December 6, 2018 0

‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான முதலிடத்தில் உள்ள நூறு பிரபலங்களையும் அவர்களது சம்பளத்தையும் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறார். சல்மான் கான் இந்த ஆண்டில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா..? மயக்கம் போட்டு விடாதீர்கள். அவரது ஆண்ரு வருமானம் ரூ.253.35 கோடியாம். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய […]

Read More

சஞ்சாரம் நாவலுக்காக 2018 சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வானார் எஸ்.ராமகிருஷ்ணன்

by on December 5, 2018 0

சாகித்ய அகாடமி விருது இந்திய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்பு மிக்க விருதாகும். இது இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் உள்ளிட்டு பலவகையான எழுத்தாளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் 53 வயதான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.  நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றி அவர் எழுதிய சஞ்சாரம் நாவல் இந்த விருதை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தத் தேர்வு இன்று அறிவிக்கப்பட்டது. கடந்த 27 வருடங்களாக […]

Read More

தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களுக்கு வழிவிட்ட அதர்வா படம்

by on December 5, 2018 0

நாளை மறுநாள் 21ம்தேதியன்று தியேட்டர்காரர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கப் போகிறது. தனுஷின் ‘மாரி 2’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படங்கள் வெளியாகவிருக்க, இவற்றுடன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘கனா’ படமும் களம் இறங்குகிறது. இந்தப்படங்களுக்கு முன்னாலேயே முடிவடைந்து தயாரிப்பாளர் சங்கத்திடம் வெளியிட அனுமதி பெற்று வெளியீட்டுத் தேதியும் அறிவித்த அதர்வாவின் ‘பூமராங்’ படமும் 21ம் தேதியன்று வெளியாகவிருந்தது. ஆனால், இப்போது ஒருவாரம் தள்ளி 28ம்தேதி அந்தப்படம் வெளியாகுமென்று படத்தின் தயாரிப்பாளரும், […]

Read More

கேரள மார்க்கெட்டைக் குறி வைக்கும் விமல் – கேலரியுடன்

by on December 4, 2018 0

யார் மச்சம் எப்போது வேலை செய்யுமென்றே தெரியாது. இப்போதைக்கு விமலுக்கு மச்சம் உச்சத்தில் இருக்கிறது. இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு விலை போனதும், அதிக தியேட்டர்களில் வெளியாவதுமான படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இம்மாதம் 7ம்தேதி வெளியாகும் படம் இது. கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள்தான் வெளியாகுமாம். ஆனால் விமலின் இந்தப் படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக, விமல் கேரள மார்க்கெட்டை இந்தப்படத்தின் மூலம் குறி வைப்பது […]

Read More

விஜய் சேதுபதி தனுஷ் ஜெயம் ரவி அதர்வா மோதும் டிசம்பர் 3வது வாரம்

by on December 4, 2018 0

ஏற்கனவே அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்துள்ள பூமராங், டிசம்பர் 21ல் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘அடங்க மறு’ வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் சமீபமாக பாலாஜி தரணீதரன் இயக்கி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’யும் அவர்களுக்கு ஒருநாள் முன்னதாக அதாவது டிசம்பர் 20-ல் வெளியாகுமென்று அறிவித்தார்கள். இவை போதாதென்று இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி 2 உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருப்பதாக வுண்டர்பார் அறிவித்துள்ளது. யுவன் சங்கர் […]

Read More

3 மில்லியன் பார்வைகள்… நம்பர் 1 டிரெண்டிங் இருந்தும்… – மரண மாஸ் விமர்சனம்

by on December 4, 2018 0

நேற்று மாலை 6 மணிக்குதான் வெளியானது ரஜினி நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தின் பாடல் வரிகள் வீடியோ.  ‘மரண மாஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தப்பாடலின் முன்னோட்டம் நேற்று காலையே வெளியாகி எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தது. அனிருத் முதல்முறையாக ரஜினிக்கு இந்தப்படத்தில் இசைப்பதால் அது குறித்தும் எதிர்பார்ப்பு இருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்கள் தாரை தப்பட்டை உள்ளிட்ட தோல்வாத்தியக் கருவிகளை இசைத்தது பரபரப்பாக இருந்தது. மட்டுமல்லாமல் இன்றைய இளம் இயக்குநர்களில் கிளாஸிக்கான படங்களைக் கொடுத்துவரும் கார்த்திக் சுப்பராஜ் […]

Read More

அம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி – ராகுல் காந்தி

by on December 3, 2018 0

மகாரஷ்டிரா நாசிக் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயி சஞ்சய் சாதே. தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் பேசி  மொத்த வெங்காயத்தையும் விற்றுக் கிடைத்த 1064 ரூபாய் பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது தெரிந்திருக்கும்.   அப்படி நாசிக் விவசாயி வெங்காயம் விற்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அனுப்பிய செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி […]

Read More
CLOSE
CLOSE