விரைவில் துவங்குகிறது “ஜியோ மார்ட்” நேரடி விற்பனை மற்றும் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்!* வால்மார்ட், அமேசான், பிக் பேஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருள்கள் கிடைக்கும் வகையிலான சூப்பர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்களை துவக்க உள்ளது. “நாட்டின் புதிய கடை’ என்ற அடைமொழியுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஜியோ மார்ட், தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் […]
Read Moreபுதுமைப்பித்தன் என்று இன்று ஒருவரைச் சொன்னால் அது ரா.பார்த்திபனை மட்டும்தான். தன் படங்களில் ஏதாவது ஒரு புதுமையைச் செய்யும் அவரது வசனத்துக்கென்றே தமிழில் தனி அகராதி போடலாம். புதுமைகளைத் தாண்டி அவர் படைத்த சாதனையாக அமைந்தது அவர் கடைசியாக இயக்கி, நடித்து, தயாரித்த ‘ஒத்த செருப்பு.’ முழுப்படத்திலும் அவர் ஒருவரே நடித்து சாதனை படைத்த அந்தப்படம் பல விருதுகளையும் பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் இப்போது அடுத்த சாதனை முயற்சிக்குத் தயாராகியிருக்கிறார். இன்று தொடங்கும் அந்தப்படத்தின் […]
Read Moreஇன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டத்தை மிஞ்சி விஜய் ரசிகர்கள் கொண்டாடிய விஷயம் தளபதி 64 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது தான். மாஸ்டர் என்ற அந்த தலைப்புடன் விஜய் 64 படத்தின் முதல்பார்வை வெளியானது. ஆனால் அந்த ஃபர்ஸ்ட் லுக் கில் விஜய் முகம் சற்றே கலங்கியது போல் தோன்றுகிறது. ஃபர்ஸ்ட் லுக் படம் சரியாக அச்சாகவில்லையோ என்று பலரும் முதலில் நினைத்தார்கள் ஆனால் திட்டமிட்டபடி தான் அப்படி விஜய் முகம் கலங்கியவாறு இருப்பதா க வைக்கப்பட்டுள்ளதாம். அது […]
Read Moreஇது வெப் சீரீஸ் சீசன். சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் வாய்ப்பிழந்து போனால் அடுத்து அடைக்கலமாகும் இடமாக முன்பு டிவி சீரியல் இருந்தது. இப்போது அந்த இடத்தை வெப் சீரீஸ் ஆக்கிரமித்து இருக்கிறது. அப்படி சினிமாவில் தமிழ் தொடங்கி இந்தி வரை கோலோச்சிய தமன்னா, கடைசி கடைசியாக பேயாகவே நடித்து வந்தார். இனியும் விட்டால் சினிமாவில் தன்னை நிரத்தரப் பேயாக ஆக்கிவிடுவார்கள் என்று பயந்து அவரை நோக்கி வந்த வெப் சிரீஸை கபாலென்று பிடித்துக் கொண்டார். அப்படி அவர் […]
Read More‘தல’ ரசிகர்களுக்கு இனி வலிமை படம் பற்றிய அப்டேட்டுகளைப் பெறுவதுதான் தலையாய வேலையே. இந்நிலையில் தல அஜித் அடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ காம்போவான போனி கபூரின் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அவரது 60-வது படமான ‘வலிமை’ பற்றிதான் இனி அவர்களின் அடுத்த நகர்வு இருக்கப் போகிறது. அதன்படி நவம்பரில் இருந்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து புது வருடத்தின் ஜனவரியில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. படத்தில் அஜித் உடன் […]
Read Moreஎஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதுதான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் […]
Read More