‘ஃபர்ஸ்ட் காபி புரொடக்ஷன்’ சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படமான ‘சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ளனர் என்பது தெரிந்த தகவலாக இருக்கலாம். பெண்கள் முக்கியத்துவம் பெற்ற தயாரிப்பில் அதற்கு உழைத்த அத்தனைப் பெண்களும் ‘சிறகு’ பெயர் பொரிக்கப்பட்ட பார்டருடன் ஒரே நிற புடவை அணிந்து வந்திருந்தது சிறப்பான காட்சி. விழாவில் படத்தின் தூண்களான தயாரிப்பாளர் […]
Read Moreபெரு வலியை, பெரும் மகிழ்வை ஒரு வரியிலேயே கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் இலக்கியவாதிகள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்புதான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் ‘சிறகு’ படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை நேற்று இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் துவங்கி […]
Read Moreவிஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டியில் படப்பிடிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார். ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு […]
Read Moreஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ராட்சசி’. ‘ராட்சசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் அவர்களிடம் படத்தைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்… “ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா […]
Read Moreசாதியே கூடாது என்று பல ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தில் பலர் உறக்க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிகொண்டு திரிகிறார் – பல பொய்யான வரலாற்றை தனக்கு சாதகமாக திரிக்கிறார், தலித்தியம் பேசுகிற இயக்குநர் இரஞ்சித்! இவர் போன்ற பல பிற்போக்கு வாதிகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி புகழடைவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். நாம் அவர்களுக்கெல்லாம் பாடம் நடத்தி நேரத்தை விரயம் செய்யக் கூடாததுதான்! ஆனால் தமிழரின் மாபெரும் அடையாளமான தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழனைக் கொச்சைப்படுத்தும் போது […]
Read Moreஎதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது போய்ஷன் சர்வதேச ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN), ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட் ஃபெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘அந்தாதுன், கல்லி பாய் மற்றும் மணிகாமிகா’ ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்பட இருக்கிறது.
Read More