October 14, 2026
  • October 14, 2026

இயக்குனர்கள் ஷங்கர் (ஜேடி) ஜெர்ரியின் அன்னையர் ஒரே நாளில் மரணம்

by on May 18, 2021 0

தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக பயணித்து வருபவர்கள் ஜேடி ஜெர்ரி. சினிமாவின் தொழில்நுட்பம் தெரிந்த இவர்களை மற்ற சினிமா இயக்குனர்களும் தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்வதுண்டு. இந்நிலையில் இந்த இருவரில் ஜெர்ரியின் தாயாரான சூசையம்மாள் இன்று காலை கொடைக்கானலில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 78. அதேபோல பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின தாயாரான எஸ்.முத்துலஷமி இன்று சென்னையில் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 88. I

Read More

கரிசல் இலக்கிய முன்னோடி கிரா மறைந்தார்

by on May 18, 2021 0

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் மண் சார்ந்தும் அதன் மக்களின் வாழ்க்கை சார்ந்தும் தனது படைப்பில் கொண்டு வந்ததவர் எழுத்தாளர் கிரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாக பெருமை பெற்றிருப்பினும் அனைத்து வட்டார இலக்கியங்களுக்கும் இவரை முன்னோடி என்றே கொள்ளமுடியும். 1922ஆம் ஆண்டு கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்த கி.ரா. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது வியப்புக்குரிய அம்சம். விவசாயத்தில் இருந்து தன் நாற்பது வயதில் இலக்கிய உலகுக்கு வந்தார். […]

Read More

இன்று கோலிவுட்டை உலுக்கிய கொரோனா மரணங்கள்

by on May 17, 2021 0

நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி ஒன்று இன்று நம்மைச் சுற்றி மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன இந்தவாரம் அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் ஒரேநாளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கோலிவுட்டை பொறுத்த வரையில் கொரோனா மரணம் தினசரி நிகழ்வாகவே இருந்து வருகிறது.  யாருமே எதிர் பார்க்காத நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக மறைந்தார். அவருக்கு மனைவியும், […]

Read More

கொரானா பரவலை கட்டுப்படுத்தஅனைத்து கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக்குழு

by on May 16, 2021 0

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூட்டினார். அப்போது ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இடம் பெற்றுள்ள எம்எல்ஏ க்கள் விவரம்… திமுக- எழிலன் அதிமுக- சி. விஜயபாஸ்கர் பாஜக- […]

Read More

தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்

by on May 15, 2021 0

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி. எஸ்.முருகன் முன்னணி நடிக, நடிகைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, ‘முன்னணி நடிக, நடிகைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்… வணக்கம். திரைத்துறையினருக்கு இது கடுமையான சோதனைக்காலம். கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் பணிகள் எதுவும் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். குறிப்பாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 80 சதவீதம் பேர் வறுமைகோட்டுக்கு கீழ் […]

Read More

பாடகர் அவதாரம் எடுத்த பப்ளிக் ஸ்டார்

by on May 13, 2021 0

‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உலா வரும் வழக்கறிஞர் துரை சுதாகர் நடித்துள்ள படம் “நான் ஒரு முட்டாள்”. இந்த படத்துக்காக முதல் முறையாக துரை சுதாகரே பாடகர் அவதாரம் எடுத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படம் குறித்து அவர், ” இது இன்றைய தலைமுறையின் ஒரு குடும்பஸ்தனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயார் ஆகி இருக்கிறது. பொதுவாக இப்போதைய ட்ரெண்டாகி விட்ட மதுப்பழக்கத்தால் கல்லீரல் , கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் […]

Read More

பிரபல தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை

by on May 12, 2021 0

மறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தேனாண்டாள் பிலிம்ஸ் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி.  இவரும் பிரபல தயாரிப்பாளர் ஆவார். தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் என்ற பெயரில் பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறார். விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்தவர் இவர்தான். இவருக்கு இன்று லேசான மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு அப்போது கண்டறியப்பட்ட ரத்த நாள அடைப்பு இன்று இரவு நடந்த ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சரி செய்யப்பட்டது. இப்போது […]

Read More

கிணத்தைக் காணோம் புகழ் நெல்லை சிவா திடீர் மரணம்

by on May 11, 2021 0

அன்றாடம் ஒரு சினிமா பிரபலம் இறந்து வருவது கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இன்று மாலை பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா மரணமடைந்தார். வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்த நெல்லை சிவா பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார் இப்போது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சொந்த ஊரான திருநெல்வேலியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு […]

Read More

மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக் குறைவு

by on May 10, 2021 0

சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக தன்னுடைய எதிர்மறை செய்திகளை பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். கொரோனா என்னும் நோயே இல்லை என்பது இவர் வாதம். இந் நிலையில் அவருக்கு இன்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலில் கொரானா இருக்கிறதா என்று கண்டறியும் சோதனை செய்தார்கள். நல்லவேளையாக அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்தது. பிறகு அவருக்கு நோய் கண்டறியும் […]

Read More

பிரபல மலையாள கதாசிரியர் இயக்குனர் டென்னிஸ் ஜோசப் மரணம்

by on May 10, 2021 0

பிரபல மலையாள சினிமா கதாசிரியரும் டைரக்டருமான டென்னிஸ் ஜோசப் காலமானார். ஜோஷியின் டைரக்ஷனில் வெளியான நாயர்ஸாப், நியூடெல்லி, கோட்டயம் குஞ்சப்பன், No.20. மெட்ராஸ் மெயில், சங்கம் உட்பட ப ட ஹிட் படங்களின் கதாசிரியர். ‘அதர்வம் ‘ படத்தில் சில்க்கை கிராமிய தமிழ்ப் பெண்ணாக நடிக்க வைத்தவர். ‘ மனு அங்கிள் ‘ படத்துக்காக தேசிய விருது பெற்றவர். 40.க்கும் மேற்பட்ட மலையாள சூப்பர் ஹிட் படங்களின் கதாசிரியர். கதைக்காக அதிக சன்மானம் பெற்ற கதாசிரியர். இவரது […]

Read More
CLOSE
CLOSE