May 2, 2024
  • May 2, 2024

விஜய் சேதுபதி குடும்பத்தின் மீது பதிவிடும் அவதூறு செய்திகள் மேல் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்

by on May 10, 2020 0

நடிகர் விஜய் சேதுபதி எப்போதோ தொலைகாட்சியில் பேசிய ஒரு செய்தியின் அடிப்படையில் இப்போது அவர் மீதும்  அவரது குடும்பத்தின் மீதும் அவதூறு செய்திகள் பதியப்பட்டு வருகின்றன. அப்படி அவர் மீது அவதூறான செய்திகளை    பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த பதிவுகளை நீக்கவும் கோரி விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளர். அந்தப் புகாரின் நகல் கீழே…

Read More

நெருக்கடி காலத்திலும் தொடரும் சாதீய தாக்குதல் – பா. இரஞ்சித் வேதனை

by on May 10, 2020 0

உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்தொற்றினால் நாம் […]

Read More

விஜய் முன்னிலையில் அனிருத் இசையில் இசைக்க வேண்டும் – இரண்டு கைகள் இல்லாத இசைக் கலைஞரின் விருப்பம்

by on May 9, 2020 0

நடன இயக்குனரும் நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்சின் மனிதநேய செயல்கள் நாம் அனைவரும் அறிந்ததே. அவர் செய்து வரும் சேவைகளில் ஒன்று உடல் அளவில் சிறப்பு திறன் கொண்டு இருப்பவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் முயற்சி. அப்படி அவரது குழுவில் இருக்கும் தான்சேன் என்ற இரு கையும் இல்லாத ஒரு வாலிபர் மிகுந்த இசைத் திறமை கொண்டிருக்கிறார். இரண்டு கைகளும் இல்லாவிட்டாலும் அவரால் கீபோர்டு வாசிக்க முடிகிறது. டிரம்ஸ் இசைக்க முடிகிறது. […]

Read More

சாய் பல்லவியை கௌரவப்படுத்திய தெலுங்கு படவுலகம்

by on May 9, 2020 0

மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” படத்தின் மூலமாக தென்னிந்தியர்கள் மனதை கொள்ளை அடித்த இளம் நாயகி ‘ சாய் பல்லவி.’ இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார். இத்தனைக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்‌ஷித் ஆகியோரது டான்ஸ் வீடியோக்களை கண்டு டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், முறையாக டான்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டதில்லை என்பது வியப்பாக இருக்கிறது. இதற்கும் இவர் வெறும் […]

Read More

இந்த வருடம் வரை தன் சம்பளத்தை முழுதும் விட்டுக் கொடுத்த நடிகர்

by on May 9, 2020 0

நடிகர்கள் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போனது ஒரு காலம். ஆனால் இப்போதோ ‘ கோவிட் 19 ‘ கோர தாண்டவத்து க்கு பிறகு சினிமா தொழில் நசிந்து விடும் நிலையில் எல்லோரும் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் முதல் முதலாக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார். தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண், உதயா, இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் தங்கள் சம்பளத்தை […]

Read More

ஓ டி டி ஒளிபரப்பில் சாதனை புரிந்த தனுஷின் பட்டாஸ்

by on May 8, 2020 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. கடந்த மே மாதம் முதல் தேதி பல மொழிகளிலும் முதல் முறையாக தொலைக்காட்சி ஓ.டி.டி. முறையில் ஒளிபரப்பான் பட்டாஸ் திரைப்படம் மாபெரும் சாதனை செய்திருக்கிறது. 13149 000 என்ற எண்ணிக்கையைத் தொட்டு, தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்த படம் என்ற சாதனையையும் பட்டாஸ் நிகழ்த்தியிருக்கிறது. குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுதுபோக்குப் படங்களை சத்யஜோதி […]

Read More

மக்கள் நீதி மன்றம் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு

by on May 8, 2020 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது.    குடிப்பவர்களைத் தவிர இந்த ஏற்பாட்டை யாருமே வரவேற்கவில்லை. குடிப்பவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.    இதற்கிடையை தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என […]

Read More

கோரிக்கைகள் நிறைவேறும் வரை தியேட்டர்களை திறப்பதாக இல்லை – திருப்பூர் சுப்பிரமணியம்

by on May 8, 2020 0

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம், சங்கத்தின் உறுப்பினர்களுக்காக வெளியிட்ட ஆடியோவில் விரிவாகப் பேசியுள்ளவை…  “வரும் மே 25 அல்லது ஜுன் முதல் வாரம் திரையரங்குகளைத் திறக்க தமிழக முதல்வர் அனுமதி அளிக்க உள்ளதாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு முன்பாக நாம் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசிடம் கேட்க வேண்டும். அந்தக் ஐந்து கோரிக்கைகளை விளக்கி தமிழக அரசிடம் ஏற்கெனவே நாம் அனைவரும் ஒன்று […]

Read More

டாஸ்மாக் திறப்பு பற்றிய பார்த்திபன் பார்வை

by on May 7, 2020 0

பல்கலை வித்தகர் பார்த்திபன் இன்ஸ்டா பக்கத்தில் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் அவர் நடித்து பிரபலமாக பேசிய வசனத்தை கொஞ்சம் மாற்றி புதிதான கமெண்ட் போட்டுள்ளார். மக்காள்!!!! இன்னைக்கு மது’ரைக்கு போறவுக நிச்சயம் மேலூரு’க்கு போவீக. நாத்தம் குடிக்க – நாசமா போவாதீக. இந்த மாசமட்டுமாவது போவாதீக-உங்க பொண்டு புள்ளைகளுக்காகவாது போவாதீக புண்ணியமாப் போவுங்க!  

Read More
CLOSE
CLOSE