July 3, 2026
  • July 3, 2026

அரசியல் த்ரில்லரான ரத்தம் அக்டோபர் 6 -ல் வெளியாகிறது

by on September 12, 2023 0

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில், சி.எஸ். அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 அன்று வெளியாகிறது! தனது தனித்துவமான கதைத் தேர்வினால், பாக்ஸ் ஆஃபிசில் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தத் திரைப்படமாக ‘ரத்தம்’ வெளியாக உள்ளது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தத் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதியில் இருந்து வெளியீட்டை […]

Read More

உலகம் முழுவதும் 574.89 கோடி ரூபாயை வாரிக் குவித்த ஜவான்

by on September 12, 2023 0

ஷாருக்கானின் ‘ஜவான்’ பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து வெற்றி நடையுடன் கம்பீரமாக பயணிக்கிறது. உலகம் முழுவதும் 574.89 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஐந்து நாட்களில் 319.08 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.!   ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு மக்களின் பேராதரவு தொடர்கிறது. முதல் நாளிலேயே தனது பிரம்மாண்டமான வருகையை பதிவு செய்த நிலையில்.. ஒவ்வொரு நாளும் இந்தத் திரைப்படம் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதிரடி பொழுதுபோக்கு ஆக்சன், நாடகம், அழுத்தமான சென்டிமென்ட்.. என பலவற்றைக் கொண்டிருப்பதால் […]

Read More

50 ஆவது படம் ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்துள்ளது – விஜய் சேதுபதி

by on September 11, 2023 0

*நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான ‘மஹாராஜா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா!* பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் முதலாவதாக பேசிய இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத், “விஜய் சேதுபதி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் ஐம்பதாவது படத்திற்கு நான் இசையமைக்கிறேன் […]

Read More

என் 23 வருஷப் படம் சித்தா – நெகிழும் சித்தார்த்

by on September 11, 2023 0

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும் அதற்கு முன்பே மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த்.  கடந்த 23 வருடங்களாக இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து விட்ட சித்தார்த், தான் நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தப் படங்களையும் தயாரித்து வருகிறார். இப்போது தன் ‘எடாக்கி என்டர்டைன்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்திருக்கும் படம் ‘சித்தா’. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ சேதுபதி ‘ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இயல்பான ஒரு ஹீரோவாக […]

Read More

அங்காரகன் திரைப்பட விமர்சனம்

by on September 10, 2023 0

நவ கோள்களில் செவ்வாய் கிரகத்துக்கு பெயர்தான் அங்காரகன். ஆனால் படத்தில் அந்த செவ்வாய் கோளுக்கும், கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன்தான் அங்காரகன். அவன் பேயாக மாறி மக்களை அபேஸ் செய்கிறான் என்கிற நம்பிக்கைதான் லைன். குறிஞ்சி மலையில் அமைந்த ஒரு இயற்கை எழில் வாழ்ந்த தங்குமிடம். அங்கே பல பேர் வந்து தங்கிச் செல்லும் சூழலில் ஒரு பெண் மாயமாவது தெரிய வருகிறது.  அதை விசாரிக்க வருகிறார் காவல் அதிகாரியான சத்தியராஜ். […]

Read More

ரெட் சாண்டல் திரைப்பட விமர்சனம்

by on September 10, 2023 0

கடின வேலைகளைச் செய்பவர்கள் “உயிரைக் கொடுத்து வேலை செய்கிறேன்..!” என்பார்கள். ஆனால், உண்மையிலேயே உயிரைக் கொடுத்து செய்யும் வேலைகள் சில இருக்கின்றன. அதில் ஒன்றுதான் செம்மரக் கடத்தல்.  திருப்பதிக் காடுகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்க அவற்றை கள்ளத்தனமாகக் கடத்த விரும்புபவர்கள், மரங்களை வெட்ட தமிழ்நாட்டில் இருந்து வறுமையில் உள்ளவர்களைப் பயன்படுத்துவதும் போலீஸ் வேட்டையில் அந்த அப்பாவிகள் இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தக் கதையை கண்ணீரும், ரத்தமுமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம். வட சென்னையில் […]

Read More

ஸ்ட்ரைக்கர் திரைப்பட விமர்சனம்

by on September 10, 2023 0

இந்த வாரத்துக்காக ஆவி வந்த படம் இது.  இன்னொரு ஆவிப் படமா என்று நாம் அலுத்துக் கொண்டு உட்காரும்போது ஆவி உலகம் என்பது புனைவு அல்ல – இயற்கையுடன் சம்பந்தப்பட்டதுதான் என்று ஒரு மகா விளக்கம் கொடுத்துப் படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு. அடடே… பரவாயில்லையே, ஆவி கதையில் ஒரு அறிவியல் விளக்கம் சொல்லப் போகிறார் போலிருக்கிறது என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் ஓஜா போர்டைக் கையில் வைத்துக்கொண்டு கதாநாயகன் ஜஸ்டின் விஜய் ஆவிகளுடன் பேச ஆரம்பித்து விடுகிறார். […]

Read More

Australian Government to hold Study Australia Showcase in Chennai

by on September 8, 2023 0

A step towards your Australian dream: Australian Government to hold Study Australia Showcase in Chennai • The roadshow is aimed at providing relevant information about study in Australia. • The showcase will provide students, parents, and education leaders an opportunity to interact with representatives from Australian universities and hear from government officials on Australian education. […]

Read More

ஜவான் திரைப்பட விமர்சனம்

by on September 7, 2023 0

இந்திப் படங்களைப் பார்த்து கோலிவுட் வாயைப் பிளந்தது ஒரு காலம். இப்போது தொழில்நுட்ப ரீதியில் கோலிவுட் படங்கள் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்க… பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அப்படி இதற்கு முன்னர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பாலிவுட்டில் படம் இயக்கிப் பெயர் வாங்கிய நிலையில், இயக்குனர் அட்லியின் திறமை கண்டு, தான் நடிக்கும் தன்னுடைய சொந்தப் படத்தை இயக்கச் சொல்லி ஷாருக்கான் அவரை அணுகியதில் இருந்து இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு தொடங்கியது. பான் இந்தியப் […]

Read More

தலையை வெட்டச் சொல்பவர் சாமியார் அல்ல கசாப்புக் கடைக்காரன் – சீமான்

by on September 6, 2023 0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை தொண்டர்களுடன் கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறில்லை. அவர் எறிந்த பந்தை பா.ஜ.க.வினர் எடுத்து விளையாடுகிறார்கள். ஒருவர் சொன்ன கருத்துக்கு கருத்துடன்தான் மோத வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதைத் தவிர்த்து தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல. உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக கூறிய அயோத்தி […]

Read More
CLOSE
CLOSE