April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிகில் தடை கோரிய வழக்கில் அட்லீக்கு உயர்நீதி மன்ற உத்தரவு
October 15, 2019

பிகில் தடை கோரிய வழக்கில் அட்லீக்கு உயர்நீதி மன்ற உத்தரவு

By 0 1004 Views
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படம் நேற்றுதான் சென்சார் முடிந்து யுஏ சான்றிதழ் பெற்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
 
 ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது உறுதியாக உள்ளது.
 
இந்நிலையில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக 
256 பக்கங்கள் கொண்ட கதையை  தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதில் ‘பிகில்’ படத்திற்கு தடை விதிக்க கோரியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லீக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார்.