March 20, 2023
  • March 20, 2023
Breaking News
July 15, 2020

பிக்பாஸ் 4 ஆவது சீசனை நிறுத்திவிட முடிவு..?

By 0 372 Views

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் தயாரிப்பு நிறுவனமான என் டமோலும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இடையே அதிக ஆர்வம் இந்த முறை இல்லை என்பது தெரிய வந்ததால்தான் என்கிறார்கள்.

ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும் பிரபலங்கள் மீண்டுமொரு பூட்டிய வீட்டிற்குள் 100 நாட்களுக்குள் இருப்பதா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதாம்.

அதனால் பிக்பாஸ் சீசன் 4 யை இந்த வருடத்தில் அப்படியே தள்ளி வைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்.

 அதோடு பிக்பாஸ் வீட்டுக்குள் கொரோனா புகுந்தாலும் ஆபத்துதான்..!