June 6, 2023
  • June 6, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு
July 15, 2020

நடிகர் அர்ஜுன் குடும்ப உறவினருக்கு கொரோனா பாதிப்பு

By 0 393 Views
நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (நடிகை மேக்னாராஜின் கணவர்) வின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அர்ஜுன் குடும்பத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
 
அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு அதிர்ச்சி செய்து அவர்கள் குடும்பத்துக்குள்ளிருந்தே வந்துள்ளது.
Mrs & Mr Dhruva Sarja
 
சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அதில், ”எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்களெல்லாம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அவரது நேர்மறை எண்ணமே அவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீள வழி வகுக்கும்..!