மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு : கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு உத்தரவு.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை – திமுக தலைவர் ஸ்டாலின்.
மே 5ஆம் தேதி மேற்குவங்க முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி.
எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு 71 கோடி ரூபாயை ஒதுக்கிய எஸ்பிஐ வங்கி.
தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம்.
வரும் 7ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – அதிமுக தலைமை அறிவிப்பு.
தமிழக சட்டமன்றம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் எதிர்க்கட்சி எனும் பெரும் பொறுப்பை சிறப்புடன் நிறைவேற்றுவோம் – இபிஎஸ் ஒபிஎஸ்.
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள் – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்கசாமிக்கு வாழ்த்துகள்; பதவியேற்பு நிகழ்ச்சி கேட்கும் நேரத்தில் நடத்தப்படும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை.
அரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை அரசு ஊழியர்களாகத்தான் கருத வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்.
ஆந்திராவில் மே 5 முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு – முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு.
தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அரசியல் கட்சிகள் கோரவில்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
இந்தியாவில் ஜூலை வரை தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் – சீரம் நிறுவன செயல் அதிகாரி.
மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தார் மம்தா பானர்ஜி.
பாஜகவுடன் இணைந்ததால் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் – திருமாவளவன் எம்பி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா.