October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லிங்குசாமி படப்பிடிப்பில் பாரதிராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்
July 17, 2021

லிங்குசாமி படப்பிடிப்பில் பாரதிராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்

By 0 507 Views

நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் #RAP019  படத்தை N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா வருகை தந்தார்.

படம் உருவாகும் விதத்தை பார்த்து இயக்குனர் N.லிங்குசாமியையும் படக்குழுவினரையும் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு #RAP019 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.