October 14, 2025
  • October 14, 2025
Breaking News
October 27, 2018

பாலியல் தொல்லை – அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்கு

By 0 1212 Views

அர்ஜூன் கதாநாயகனாக நடித்த  ‘விஸ்மயா’ (தமிழில் நிபுணன்) படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரன் கதாநாயகியாக நடித்தார். படப்பிடிப்பின் போது அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ‘மீ டூ’ தொடர்பாக பாலியல் புகார் கூறினார்.

அந்தப் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்ததுடன் தான் திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடுத்தார்.

இந்நிலையில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2015ம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் தன்னிடம் அர்ஜூன் அத்து மீறி நடந்து கொண்டதாகவும், தன்னுடைய அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஸ்ருதி ஹரிஹரன் கப்பன்பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 
அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் நடிகர் அர்ஜூன் மீது 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
‘ஆக்‌ஷன் கிங்’ மீதே ஆக்‌ஷனா..?