August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பான் இந்திய ‘பனாரஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
September 3, 2022

பான் இந்திய ‘பனாரஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

By 0 459 Views

புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதல் காவியமான ‘பனாரஸ்’ திரைப்படம், நவம்பர் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

புனித தலமான காசியை கதைக்களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘பனாரஸ்’ திரைப்படம் நவம்பர் நான்காம் தேதி முதல் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.