குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது என்ற லட்சியம் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது: பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-ல் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது
தென் இந்திய மக்களின் முக்கிய வாழ்க்கை லட்சியங்கள்களில் உடல்நலம், கொடை மற்றும் சுற்றுலா ஆகியவை உள்ளன.
● சுகாதார லட்சியங்கள் 73 சதவீதம் அதிகரித்துள்ளது கோவிட்-19 தொற்று பாதிப்புக்குப் பிறகு கொடை தொடர்பான சிந்தனை 61 சதவீதம் அதிகரித்துள்ளது சென்னையில், சேவைப் பணிகள் தொடர்பான லட்சியங்கள் 173 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் 55 சதவீதம் பேரும் பெங்களூரில் 59 சதவீதம் பேரும் பயண லட்சியங்களை வைத்துள்ளனர். இது தேசிய சராசரியான 52 சதவீதத்தை விட அதிகமாகும்
ஆயுள் காப்பீடு என்பது வாழ்க்கை லட்சியங்களை அடைவதற்கு மிகவும் விருப்பமான முதலீட்டுத் தேர்வாக உள்ளது
> வாழ்க்கை லட்சியங்கள் தயார் நிலைக் குறியீடு என்பது இந்தியாவின் 47 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தென் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் இது 41 சதவீதமாக உள்ளது
சென்னை, 15 மார்ச், 2023: முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், தமது முக்கிய ஆய்வான பஜாஜ் அலையன்ஸ் லைஃப் – இந்தியாவின் வாழ்க்கை லட்சியங்கள் தயார்நிலை ஆய்வு 2023-ன் (Bajaj Allianz Life India’s Life Goals Preparedness Survey 2023) என்ற ஆய்வில் தென்னிந்தியாவிற்கான முக்கிய தகவல்ளை வெளியிட்டுள்ளது, இது இந்தியர்களின் வாழ்க்கை லட்சியங்கள் மற்றும் விருப்பங்களை எடுத்துரைக்கிறது. இந்த ஆய்வு தென்னிந்திய மக்களின் வாழ்க்கை லட்சியங்கள், விருப்பங்கள், அவற்றை ஊக்குவிக்கும் விஷயங்கள் மற்றும் இந்த லட்சியங்களை அடைவதற்கான தயார்நிலை ஆகியவை தொடர்பான விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட வாழ்க்கை லட்சியங்களைப் பட்டியலிட்டு அந்த லட்சியங்களை அடைவதற்கு அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
தென் இந்தியாவில் இந்த ஆய்வில் கேள்விகளுக்குப் பதிலளித்தவர்களில் 74 சதவீதம் பேர் மற்ற இலக்குகளை விட முதன்மையான வாழ்க்கைக் இலக்காக குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பைத் தெரிவித்தனர். சென்னையில், பதிலளித்தவர்களில் சுமார் 76 சதவீதம் பேர் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை தங்கள் முதன்மையான வாழ்க்கை இலக்காகத் தெரிவித்தனர். ஆரோக்கியமான மற்றும் உடல் நலத்துடன் கூடிய வாழ்க்கை முறையை பின்பற்றுதல், ஓய்வூதியத் திட்டமிடல், சேவைப் பணிகள் மூலம் சமுதாயத்திற்கு பங்களிப்பை வழங்குதல் ஆகியவை சிறந்த வாழ்க்கை லட்சியங்களில் தொடர்ந்து இந்த ஆய்விலும் இடம்பெற்றுள்ளன. பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் இந்திய மக்களின் வாழ்க்கை லட்சியங்களுக்கான தயார்நிலை ஆய்வு 2023-ல் கிடைத்துள்ள தகவலின்படி, மக்களின் வாழ்க்கை லட்சியங்கள் தற்போது இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கான வாழ்க்கை லட்சியங்களின் எண்ணிக்கை. 2019-ம் ஆண்டில் 5 ஆக இருந்த நிலையில் அது 2023-ம் ஆண்டில் 11 ஆக அதிகரித்துள்ளது.
தென்னிந்திய மக்களின் முக்கியமான வாழ்க்கை லட்சியங்களின் வகைகள்
பதிலளித்தவர்களில் 74 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை மிக முக்கியமான வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
தென் இந்தியாவில் உள்ள சுமார் 30 சதவீதம் பேர் “பணத்தை பெருக்கி பணக்காரர்கள் என்ற நிலையில் ஓய்வு பெற” விரும்புகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 43 சதவீதமாக உயர்ந்துள்ளது.
● தென் இந்தியாவில் உடல்நலம் மற்றும் உடற்தகுதி இலக்குகள் 73 சதவீதம் அதிகரித்துள்ளது தென்னிந்தியர்களில் இரண்டில் ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என இரண்டிலுமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டுள்ளனர். பதிலளித்தவர்களின் முக்கியமான முதல் 5 வாழ்க்கை லட்சியங்களில் இது ஒன்றாக அமைந்துள்ளது சென்னையில் இது 2 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.
சென்னையில், சுற்றுலா லட்சியங்கள் 2.3 மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் பதிலளித்தவர்களில் 55 சதவீதம் பேர் சுற்றுலை லட்சியங்களைக் கொண்டுள்ளனர். பெங்களூரில் சுற்றுலாப் பயண லட்சியம் 59 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்பு வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றார, கொடை என்பது பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
சேவை O O லட்சியங்கள் மற்றும் தொண்டு 61 சதவீதம் தென் இந்தியாவில் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு முந்தைய காலத்தை விட இது சென்னையில் 173 சதவீதம் அதிகரித்துள்ளது தென் இந்தியாவில் உள்ள மூன்று பேரில் ஒருவர் சமூகத்தில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உருவாக்குவதில் பங்களிப்பை வழங்க விரும்புகின்றனர்.
“வாழ்க்கை, தொழில், ஆரோக்கியம் மற்றும் குடும்பம் பற்றிய நமது கண்ணோட்டங்களை கோவிட் தொற்று பாதிப்பு, மாற்றி அமைத்துள்ளது. சமூக-பொருளாதார விஷயங்களில் சுய அக்கறை, குடும்பப் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் நல்வாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ விரும்பும் ஆழமான புரிதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய மக்களின் வாழ்க்கை லட்சியங்களுக்கு நம்பகமான ஒன்றாகவும் லட்சியங்களை அடைய உதவும் வழிமுறையாகவும் ஆயுள் காப்பீடு என்பது தொடர்ந்து இருந்து வருவது மிக முக்கியமாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.” என்று பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி சந்திரமோகன் மெஹ்ரா (Chandramohan Mehra, Chief Marketing Officer, Bajaj Allianz Life Insurance) இந்த ஆய்வு அறிக்கையை சென்னையில் வெளியிட்டுப் பேகையில் கூறினார்.
வாழ்க்கை இலக்குகளுக்கான உந்துதல்கள்
பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் இந்தியாவின் வாழ்க்கை லட்சியங்கள் தயார்நிலை ஆய்வு 2023, தாக்கம் ஏற்படுத்துபவர்களின் சராசரி எண்ணிக்கை 3 முதல் 4 வரை அதிகரித்துள்ளதாக வெளிப்படுத்துகிறது. மேலும் ஆலோசனைகளை பெறுவதை மக்கள் வசதியாக உணர்கின்றனர். சமூக ஊடக தளங்கள் மற்றும் தாக்கம் ஏற்படுத்துபவர்கள் பரவலான பிரபலத்தைப் பெறுகிறார்கள். ஆலோசனைக்காக குடும்பத்தினர், பெரியவர்கள் மற்றும் நண்பர்களை நம்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியர்களுக்கான வாழ்க்கை லட்சியங்களை அடைவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதில், தாக்கம் ஏற்படுத்தும் முதல் மூன்று முக்கிய அம்சங்களில் சமூக ஊடகங்களும் ஒன்றாகும் புதிய தலைமுறை ஆரோக்கியம், பயணம் மற்றும் வாழ்க்கை முறை லட்சியங்களைத் தூண்டி எடுத்துரைப்பதில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
தங்கள் வாழ்க்கை லட்சியங்களை அடைய தென்னிந்திய மக்களின் தயார்நிலை
மொத்த இந்தியாவின் தயார் நிலை குறியீடான 47 உடன் ஒப்பிடும் போது, தென் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வாழ்க்கை லட்சியங்கள் தயார்நிலைக் குறியீடு 2023-ம் ஆண்டில் 41 ஆக உள்ளது. வாழ்க்கை லட்சியங்கள் தயார்நிலைக் குறியீடு என்பது ஒருவரின் வாழ்க்கை லட்சியங்களுக்கான நிதித் திட்டமிடலில் உள்ள நம்பிக்கை, புரிதல் மற்றும் மேல் நடவடிக்கை போன்ற செயல்பாடுகளாகும். வாழ்க்கை இலக்குகளில் 52 சதவீதத்தை, அடைவதில் தென் இந்தியர்கள் உறுதியாக இல்லை வாழ்க்கை லட்சியங்களில் நிதித் திட்டமிடல் என்று வரும்போது, தென் இந்தியாவில், 65 சதவீத வாழ்க்கை லட்சியங்களுக்குப் போதுமான நிதித் திட்டமிடல் இல்லை என்று மக்கள் கருதுகிறார்கள்.
ஆய்வு முறை
பெருநகரங்கள், முதல் நிலை நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்கள் உட்பட 13 நகரங்களில் 1936 பேரிடம் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவின் வாழ்க்கை இலக்குகள் தயார்நிலை ஆய்வு 2023″ என்ற ஆய்வை கண்ட்டார் (Kantar) ஆய்வு நிறுவனம் நடத்தியது. தென் இந்தியாவில் சென்னை, பெங்களூர், மதுரை மற்றும் குண்டூர் ஆகிய நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தென் இந்தியாவில் 609 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆய்வுப் புள்ளிவிவரத் தகவல்கள்:
● . ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வயதுப் பிரிவினர்: 22-55 வயது நபர்கள் புதிய நுகர்வோர் வகைப்படுத்தல் அமைப்பு (என்சிசிஎஸ் NCCS) A1+, A1, A2/A3 (20:50:30 விகிதம்) சம்பளம் பெறுவோர் மற்றும் தொழில் புரிவோர், சுய தொழில் செய்பவர்கள் (50:50) முதலீடுகளுக்கான முடிவு எடுப்பவர்கள் இந்தியாவின் வாழ்க்கை இலக்குகள் பற்றிய முழுமையான புரிதலை வழங்க, அளவு அணுகுமுறை மூலம் புள்ளி விவர ரீதியாக சரியான தகவல்கள் பெறப்பட்டுள்ளது. டேப்லெட் சாதனத்தின் அடிப்படையிலான நேர்காணல்களைப் பயன்படுத்தி தரவு சேகரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அக்டோபர் 2022-ல் நடத்தப்பட்டது.
பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் பற்றி…:
பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இந்தியாவின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இரண்டு சக்திவாய்ந்த மற்றும் வெற்றிகரமான நிறுவனங்களுக்கிடையேயான ஒரு கூட்டு நிறுவனம் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் ஆகும். இந்தியாவின் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் மற்றும் உலகின் முன்னணி சொத்து மேலாண்மை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஒன்றான அலையன்ஸ் எஸ்.இ. ஆகியவற்றின் கூட்டு நிறுவனம்தான் இந்த பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம்.
2001 ஆம் ஆண்டில் அதன் நடவடிக்கைகளைத் தொடங்கிய, பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இருபது ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் நாடு முழுவதும் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. இது அதன் 509 கிளைகள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 700-க்கும் கூடுதலான முகவர்கள் (31 டிசம்பர் 2022 நிலவரப்படி), நம்பகமான கூட்டு நிறுவனங்களின் விரிவான தொகுப்பு மற்றும் அதன் ஆன்லைன் விற்பனை சேனல் வழியாக பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. வாடிக்கையாளர்களின் வாழ்க்கை இலக்குகளை அடைய உதவுவதே நிறுவனத்தின் பிராண்ட் வாக்குறுதியாகும். டிஜிட்டல் சொத்துக்களின் வலுவான தொகுப்புடன் புதுமையான காப்பீட்டுத் தீர்வுகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.. பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன சேவைகளை வழங்க இந்த நிறுவனம் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாழ்க்கை இலக்குகளுக்கான தாரக மந்திரங்கள் (Life Goals Mantras), பிளாங்கத்தான் போன்ற பல தனித்துவமான தளங்கள் மூலம் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை வழங்குகிறது.