June 29, 2026
  • June 29, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

இயற்கை விவசாயத்துக்கு விழா எடுத்த திரை இயக்குநர்

by on August 3, 2019 0

இயற்கை விவசாயத்தைப் பற்றி ‘குத்தூசி’ என்ற திரைப்படத்தை எடுத்த இயக்குனர் சிவசக்தி, நிஜத்தில் தன் வயலிலும் இயற்கை விவசாயத்தை… அதுவும் பாரம்பரிய நெல்லில் செய்து வருகிறார். அத்துடன் நில்லாமல் தனது பிறந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர் கிராமத்தில் இயற்கை விவசாயம் அறிமுக விழா ஒன்றை நடத்தினார். விழாவில் ‘நம்மாழ்வார்’ படத்தை திறந்து வைத்து இயற்கைவிவசாயம் ஏன் வேண்டும் , அதன் சிறப்பு பற்றியும் சான்றோர்கள் பேசினார்கள். மற்றும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் காட்டுயாணம், காலாநமக், மாப்பிள்ளை […]

Read More

ஜாக்பாட் திரைப்பட விமர்சனம்

by on August 2, 2019 0

ஜோதிகா முக்கிய வேடமேற்றாலே பெண்ணுரிமைக்காகவும், கல்விக்காகவும் போராடுகிற வேடமாகத்தான் அது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது நிஜம்தான். ஆனால், ‘நாங்களும் ஹீரோதான்…” பாணியில் ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஹீரோ என்னென்ன சாகசங்கள் புரிவாரோ அப்படியெல்லாம் ஒரு ஹீரோயினாக இருந்து ஹாலிடே மூடில் ஜோ நடித்துக் கொடுத்திருக்கும் படம்தான் இந்த ஜாக்பாட். ஹீரோவின் படம் போலவே அதிகாலை 5.30 மணி ப்ரீமியர் காட்சியெல்லாம் தியேட்டரில் வைத்து கலக்கி விட்டார்கள். கமர்ஷியல் படம் என்ற ஒற்றைவரி செய்தி போதும்… […]

Read More

ஆவின் பால் விலை விரைவில் உயர்கிறது

by on August 2, 2019 0

பொது மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் பாலை விற்பனை செய்யும் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் விலையை கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். அதன்பின் ஐந்து ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் பால் உற்பத்திக்கான செலவு பட மடங்கு உயர்ந்துள்ளதாகவும், தீவனம் விலை அதிகரித்துள்ளதால் மாடுகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் […]

Read More

கல்லூரி மாணவிகளை கலகலப்பூட்டிய துருவ் விக்ரம்

by on August 1, 2019 0

விக்ரமுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமுக்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது என்லாம். தன் முதல் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம்.    தெலுங்கில் பெரு வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரிமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி. முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த […]

Read More

கதை திருடர்களை தோலுரிக்க வரும் படைப்பாளன்

by on July 31, 2019 0

உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது. அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான்  ‘படைப்பாளன்’. LS தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் S.நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் LS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் […]

Read More

எஸ்பி ஹோசிமின் இயக்க ஜப்பான் ஹாங்காங்கில் தயாரான சுமோ

by on July 31, 2019 0

ஷங்கரிடம் சினிமா பயின்றவரும், ‘பிப்ரவரி 14’, ‘ஆயிரம் விளக்கு’ படங்களின் இயக்குநர் எஸ்பி ஹோசிமின் ஒரு இடவெளிக்குப் பின் மீண்டும் கலக்க வந்திருக்கிறார் ‘சுமோ’ வை எடுத்துக்கொண்டு. டைரக்டர் ஹரிதானே 10, 15 ‘சுமோ’வை எடுத்துக்கொண்டு படங்களில் கலக்குவார் என்று ‘கடி’க்க வேண்டாம். ஹோசிமின் வருவது சுமோ காரில் அல்ல… நிஜ மல்யுத்த ஜப்பானிய வீரர் ‘சுமோ’வுடன். உலகிலேயே கடினமான மல்யுத்தமான ‘சுமோ’ வீரருடன் படத்தில் மோதப் போவது நம்ம மிர்ச்சி ஷிவா. கேட்டாலே வரும் சிரிப்பு […]

Read More

தொரட்டி படத்தின் விமர்சனக் கண்ணோட்டம்

by on July 31, 2019 0

சஸ்பென்ஸ் வைக்காமல் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நாளை மறுநாள் (02-08-2019) வெளியாகவிருக்கும் ‘தொரட்டி’ படம் நன்றாக இருக்கிறது…’ நிற்க… (உட்கார்ந்தாலும் கவனிக்க…) இந்த ‘நன்றாக இருக்கிறது…’ என்ற இரண்டு வார்த்தைகளை அவரவர் புரிந்து கொள்ளும் தன்மையே வேறு. அதனால், எப்படி ‘நன்றாக இருக்கிறது’ என்று புரிய வைக்க முயல்கிறேன். ‘மெர்சல்’ படம் நன்றாக இருக்கிறது என்பதற்கும், ‘அவள் அப்படித்தான்’ நன்றாக இருக்கிறது என்பதற்கும் வார்த்தைகள் ஒன்றுதான். ஆனால், பொருள் வெவ்வேறு. “நன்றாக இருக்கிறது…” என்று சொன்னதை விஜய் ரசிகர் […]

Read More