September 27, 2026
  • September 27, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

இயக்குனர் சீனு ராமசாமிக்கு நேற்று இன்னொரு திருமணம் செய்துவைத்த ட்விட்டர்

by on October 7, 2020 0

இன்றைக்கு சமூக வலைதளங்கள் உடன் தொடர்பில் இல்லாதவர்களே இருக்க முடியாது. அதிலும் பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலமாகவே தங்கள் தொடர்புகளை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் அவ்வப்போது சிக்கல்களும் வருவதுண்டு. முக்கியமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்து அதில் தவறான தகவல்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்களும் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இயக்குனர் சீனு ராமசாமி வைத்திருக்கும் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அவருக்கு நேற்று தான் திருமணம் ஆனதாக பதிவாகி […]

Read More

முதல்வர் வேட்பாளர் யார் என்பது எங்களுக்கும் நாளைதான் தெரியும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

by on October 6, 2020 0

சென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ; “திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு க்கு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. திரைத்துறையின் நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டி ருக்கிறது…” என்ற அவர், “கொரோனா […]

Read More

கபடதாரி முதல் பார்வையை சூர்யா வெளியிட்ட ரகசியம்

by on October 6, 2020 0

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த வுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’ படத்தின் ஹீரோ சிபிராஜுக்கு எதிர்பாராத பரிசு வழங்க நினைத்த ‘கபடதாரி’ படக்குழுவினர் படத்தின்  முதல் பார்வையை இன்று […]

Read More

காஜல் அகர்வாலுக்கு திருமணம் அக்டோபர் 30 ல் நடக்கிறது

by on October 6, 2020 0

காஜல் அகர்வால் இந்தி நடிகையாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தென்னக முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் அஜித்-விஜய் இருவருடனும் ஜோடி போட்ட நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.  இந்நிலையில் ஒரு திடீர் அறிவிப்பை செய்து இருக்கிறார் காஜல் அகர்வால். ரசிகர்களுக்கு அந்த செய்தி ஷாக் ஆக இருந்தாலும் அவரைப் பொருத்தவரை அவர் வாழ்வின் இனிமையான தருணம் அது. ஆம்… அவருக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. மணமகன் பெயர் […]

Read More

உயிரிழந்த கணவரின் கட் அவுட்டை வைத்துக்கொண்டு வளைகாப்பு நடத்திய மேக்னா ராஜ்

by on October 5, 2020 0

சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனாவார். குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே, உயிருக்கு உயிராய் காதலித்த நடிகை மேக்னா ராஜை, 2017 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார் சிரஞ்சீவி சார்ஜா. வாழ்க்கை, மகிழ்வின் உச்சத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சென்ற ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த போது அவரது காதல் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். காதல் கணவர் சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது, அவரது உடலை மேக்னா […]

Read More

42 வருடங்களுக்கு பின் பிரச்சனைக்குள்ளான அவள் அப்படித்தான் படத்தலைப்பு

by on October 5, 2020 0

சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரிலே காயத்ரி ஃபிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிப்பதாக இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. சிலுக்கு மாதிரியான நடிகையை தேடிக் கொண்டிருப்பதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். நடிகையை தயாராகாத நிலையில் டைட்டிலை பட்டம் எப்படி பிடித்தார்கள் என்பது ஒரு […]

Read More

உடலை குறைக்க டயட் இருந்து உயிரை விட்ட நடிகை

by on October 4, 2020 0

இறைவன் கொடுத்த உடலை கூட்டுகிறேன் அல்லது குறைக்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட டயட்களை இப்போது மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் நடிகர் நடிகையர் மேற்கொள்ளும் டயட்கள் அலாதியானவை. அதில் ஒன்றுதான் Keto டயட். தன் உடல் எடை கூடி விட்டதால் அதனை குறைப்பதற்காக இந்த கீட்டோ டயட்டை மேற்கொண்டார் பெங்களூரை சேர்ந்த நடிகை மிஷ்டி முகர்ஜி. பெங்களூரில் பிறந்து வளர்ந்த மிஷ்டி , தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்து நடிகையானவர். பின்னால் வங்காள மற்றும் இந்தி படங்களில் […]

Read More

தமன்னாவையும் விடாமல் தாக்கிய கொரோனா

by on October 4, 2020 0

படப்பிடிப்புகள் இந்தியாவில் தொடங்கிவிட்ட நிலையில் நடிக நடிகையர் மிகவும் கவனத்துடன் அதில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. படப் பிடிப்பில் ஈடுபடும் எல்லா தொழிலாளர்களுக்கும் இதே பாதுகாப்பு தேவை பட்டாலும் அவர்கள் மாஸ்க் அணிந்து பணி புரியலாம். ஆனால் நடிகர் நடிகையருக்கு மாஸ்க் அணிந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் […]

Read More

03/10/2020 முக்கிய இரவுச் செய்திகள்

by on October 3, 2020 0

தமிழகத்தில் இன்று 5,596 பேர் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் மேலும் 5,622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. தமிழக அமைச்சர்கள் அனைவரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் கட்டாயமாக இருக்க வேண்டும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழப்பு. உபி : ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை. ஹத்ராஸ் இளம்பெண் […]

Read More

க பெ ரணசிங்கம் படத்தின் திரைவிமர்சனம்

by on October 2, 2020 0

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் ராமநாதபுரத்தில் நடக்கும் கதை. அங்கு ஊர் பிரச்சனைகளுக்காக குரலை உயர்த்துவதுடன் இளமை மிடுக்குடன் ரொமான்ஸ், பெர்ஃபார்மன்ஸ் என்றும் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஹீரோ விஜய் சேதுபதி. வறட்சி பூமிக்கே உரிய ரத்தச் சூட்டுடன் அலையும் அவர், இருபது வயதில் புரட்சி பேசி அலையாதவனும் இல்லை முப்பது வயதில் குடும்பத்துக்குள் முடங்காதவனும் இல்லை என்ற பதத்துக்கு அடையாளமாக காதலித்த அசலூர்  ஐஸ்வர்யா ராஜேஷைக் கல்யாணமும் செய்து கொள்கிறார். ஒரு குழந்தையும் பிறந்த சூழலில் பிழைப்புக்காக […]

Read More