July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

பாலியல் புகார் தொடர்பில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது வழக்கு பதிவு

by on October 20, 2021 0

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது தெரிந்த விஷயம். தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போலீசார் பரபரப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னணி இயக்குனரின் மருமகன் […]

Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷ்

by on October 19, 2021 0

ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் சென்னையில் ஆரம்பமாகியது.  ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதையமைப்பில் வெற்றிப்படங்களை டைரக்ட் செய்தவர்,நெல்சன் வெங்கடேசன். மீண்டும் ஒரு புதிய கதை வடியமைப்பில் இப்புதிய படத்தை டைரக்ட் செய்கிறார்.  இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து […]

Read More

ஜெய் பீம் சூர்யாவின் பவர் அறிவு வரிகளில் வெளியானது

by on October 18, 2021 0

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. .  உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் திரைப்படத்தை […]

Read More

தீபாவளி போட்டியிலிருந்து விலகும் மாநாடு – ஏன்..?

by on October 18, 2021 0

எதிர்வரும் தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது அதே தினத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சிம்பு நடித்திருக்கும் மாநாடு படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி போட்டியிலிருந்து மாநாடு படம் விலகுவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு பின் வருமாறு… “திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்…  நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட […]

Read More

அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க திரைப்பட விமர்சனம்

by on October 18, 2021 0

வித்தியாசமான சிந்தனை உள்ள படங்களை அதன் தலைப்பே காட்டிக்கடுத்துவிடும் அப்படி ஒரு படம்தான் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க… சிறுவயது காதல் வாலிபர் காதல் என்றெல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்துப் போன இந்தப் படத்தின் இயக்குனர் இதில் தள்ளாத வயதில் காதலை மட்டும் தள்ளாத ஒரு ஜோடியை பற்றிய கதை சொல்லியிருக்கிறார். காதலர்களை சேர்த்து வைப்பது என்றால் அவர்களுடைய நண்பர்களுக்கு ஏக குஷி. அது வாலிப வயது ஆனாலும் சரி வயதான காலத்திலும் சரி அப்படி வயதான […]

Read More

அரண்மனை 3 திரைப்பட விமர்சனம்

by on October 17, 2021 0

ஒரு படம் வெற்றியடைந்தால் அதே தலைப்பில் இரண்டாம் முறை எடுக்கலாம். அதே தலைப்பில் அதுவும் முதல் இரண்டு படங்களை எடுத்த அதே இயக்குநர் மூன்றாம் முறையும் எடுக்கத் துணிவதென்றால் அந்த டைட்டில் மீது அந்த இயக்குநருக்கு எப்படி ஒரு அபார நம்பிக்கை இருக்கும் பாருங்கள்.  அப்படித்தான் சுந்தர்.சிக்கு அரண்மனை மீது அப்படி ஒரு ‘பேய் நம்பிக்கை’ ஏற்பட்டு அதில் முப்பெரும் வெற்றியும் அடைந்திருக்கிறார். அதுவும் அரண்மனையில் தங்கியிருக்கும் பேய்களென்றால் அவருக்கு அப்படி ஒரு ‘பாண்டிங்’.  ஜமீன் சம்பத்தின் […]

Read More

மனைவியை தைரியமாக வெளியே அழைத்து வரும் ரியோ ராஜ் – கண்ணம்மா என்னம்மா பாடல் வெளியீட்டில் கலகல

by on October 17, 2021 0

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “கண்ணம்மா என்னம்மா”. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ள இப்பாடலின் […]

Read More

உடன்பிறப்பே திரைப்பட விமர்சனம்

by on October 13, 2021 0

பாசமலர் காலம் தொட்டு கிழக்குசீமையிலே வரை அண்ணன் தங்கை கதைகள் நிறைய பார்த்தாயிற்று. தன் பங்கிற்கு தானும் ஒரு பாசக்கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் இரா. சரவணன். நீங்கள் நான் எல்லோரும் எதிர்பார்க்கிற அதே லைன் தான்.  அண்ணனை விட்டு அகல விரும்பாத தங்கை. தங்கையை தனியே விட்டு விடாத அண்ணன் என்று சசிகுமாரும் ஜோதிகாவும் வாழ்ந்து வர ஜோதிகாவுக்கு சமுத்திரக்கனியுடன் திருமணம் முடித்து வைக்கிறார் சசிகுமார். அப்புறம் அதேதான்… சசிகுமாருக்கும் சமுத்திரகனிக்கும் ஒத்துவராத சூழல் ஏற்பட்டு அண்ணன் […]

Read More

என் படங்களிலேயே சிறந்த படம் வினோதய சித்தம் தான் – சமுத்திரக்கனி

by on October 12, 2021 0

தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரும் , இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி.தற்போது சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் படம்  வினோதய சித்தம் . சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சஞ்சிதா ஷெட்டி,முனீஸ்காந்த்,ஜெயப்பிரகாஷ்,இயக்குனர் பாலாஜி மோகன், ஹரிகிருஷ்ணன், அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள வினோதய சித்தம் படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி நாளை நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் வினோதய சித்தம் […]

Read More

மனச் சிக்கல் நோயாளியான லட்சுமி மேனன்..!

by on October 12, 2021 0

நடிகை லட்சுமி மேனன் இதுவரை ஒரு வணிகரீதியிலான கதாநாயகியாகப் படங்களில் வலம் வந்தவர். இப்போது புதிய பாத்திரங்களில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வித்தியாசமான சவாலான இதுவரை ஏற்றிராத ,யாரும் கற்பனை செய்ய முடியாத மாதிரியான கதாபாத்திரங்களுடன் கதை சொல்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறார். அவ்வகையில் கதையும் பாத்திரமும் கவர்ந்து நடிக்கும் தமிழ்ப்படம்தான் ‘ஏஜிபி’. இதில் ஸ்கீசஃப்ரீனியா (Schizophrenia) என்கிற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.அது என்ன ஸ்கீசஃப்ரீனியா ? கற்பனை உலகையும் மெய்யான உலகையும் ஒன்றை […]

Read More