‘பிகில்’ வெளிவரும் வரை அடுத்த அட்லீயின் படம் இந்தியில் ஷாருக் கானை வைத்துதான் என்றார்கள். கானும் ‘பிகில்’ வெற்றிக்கெல்லாம் வாழ்த்து சொன்னார். அத்துடன் அட்லீயுடன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பைத் தன் பிறந்தநாளில் அறிவிப்பதாகக் கூறினார்.
ஆனால், அதற்குப்பின் ‘பிகில்’ படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் செலவும் எகிறிப்போனதைக் கேள்விப்பட்ட கான் தன் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது.
அதை உறுதி செய்வதைப் போல் தன் பிறந்தநாளுக்கு அட்லீயை அழைத்தாலும் பட அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. அத்துடன் அன்றைய பிறந்தநாள் விழாவுக்கு சம்பந்தமில்லாமல் ‘அசுரன்’ வெற்றிப்பட இயக்குநர் வெற்றிமாறனையும் அழைத்திருந்தார்.
‘அசுரன்’ படத்தின் மேக்கிங், நியாயமான செலவு மற்றும் மாபெரும் வெற்றியில் லயித்த கான், அநேகமாக தன் அடுத்த படத்தை அவரை வைத்தே தயாரித்து நடிக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் இந்தியை விட்டு வெளியேறவும் முடியாத அட்லீ ரன்வீர் சிங்குக்கு நேற்று ஒரு கதை சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக, தன்னை மாற்றிய கானுக்கு பதிலாக தன் ஹீரோவை மாற்றிக்கொண்டிருக்கிறார் அட்லீ என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.