January 13, 2025
  • January 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அடிவாங்கி உடற்பயிற்சி – ஆர்யா வெளியிட்ட வைரல் வீடியோ
March 2, 2020

அடிவாங்கி உடற்பயிற்சி – ஆர்யா வெளியிட்ட வைரல் வீடியோ

By 0 862 Views

கமல், விக்ரம், சூர்யா போல உடலை ஏற்றுவது இறக்குவது என எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபடும் நபர்களில் ஆர்யாவும் ஒருவர்.

பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்காக கோவணத்துடன் ஜடா முடியுடன் நீண்ட காலம் ஆர்யா காட்சி அளித்ததே அதற்குச் சான்று.

சமீபத்தில் அவர் பா.ரஞ்சித் அடுத்து அவரை வைத்து இயக்கவிருக்கும் படத்துக்காக உடலை இரும்பு போன்று ஆக்கிய காட்சிகள் சமூக அவலை தளங்களில் வைரல் ஆயின.

இவர் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் ஆர்யாவை ஜிம் பயிற்சியாளர் ஒருவர் அடுத்தடுத்து அடிக்க அடிக்க கடுமையான உடற்பயிற்சியை ஆர்யா மேற்கொள்கிறார். இதுவும் பா.ரஞ்சித் படத்துக்காகத்தான்.

பார்க்க பதைபதைப்பை எற்படுத்தும் வீடியோ இப்போது ட்ரெண்டாகி வருகிறது. (இயக்குநர் பாலா அனுப்பிய பயிற்சியாளரோ..?)

வீடியோ கீழே…