August 30, 2025
  • August 30, 2025
Breaking News

2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..!

By on March 19, 2018 0 1110 Views

சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்ததன் அடிப்படையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சி.பி.ஐ கோர்ட் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி சைனி, சி.பி.ஐ போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை எனக்கூறி ஆ.ராசா, கனிமொழியுடன் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

ஆனால், சிறப்பு கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய முடிவு செய்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்ததன் அடிப்படையில், சிறப்பு கோர்ட்டின் விடுதலை தீர்ப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

நீதிமன்ற பதிவாளர் ஆய்வுக்குப் பின்னர் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.