October 30, 2024
  • October 30, 2024
Breaking News
November 15, 2023

‘குழந்தைகளுக்குத் தலைக்கவசங்கள்’ – அப்போலோ முன்முயற்சியின் அறிமுக நிகழ்வு

By 0 306 Views

சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “குழந்தைகளுக்குத் தலைக்கவசங்கள்” என்ற முன்முயற்சியின் அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் மாநில அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு!

 தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதால் தலையில் காயம் ஏற்படும் அபாயம் 85 சதவீதம் குறையும்

 தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அப்போலோ ஷைன் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு

சென்னை, 14 நவம்பர் 2023: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும், சாலை விபத்துக்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நடத்தப்பட்ட ’குழந்தைகளுக்குத் தலைக்கவசங்கள்’ [Helmets For Kids] என்ற மாபெரும் முன்முயற்சி பிரச்சாரம் அப்போலோ ஷைன் பவுண்டேஷன் [Apollo Shine Foundation] சார்பாக மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்சாரத்தின் நிறைவு நாளான இன்று (14-11-2023) அது தொடர்பான நிகழ்ச்சியில் மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு [Thiru P.K. Sekar Babu, Honourable Minister for Hindu Religious & Charitable Endowments] பங்கேற்றார்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வளாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் லாப நோக்கற்ற அமைப்பான அப்போலோ ஷைன் பவுண்டேஷன் (Apollo Shine Foundation)-ன் சிறப்பு முன்முயற்சியாக இந்த இயக்கம் நடத்தப்பட்டது. குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (14-11-2023) ஏற்பாடு செய்யப்பட்ட இது தொடர்பான நிகழ்ச்சியில் அப்போலோ ஷைன் அறக்கட்டளையின் இயக்குநர் ஹர்ஷத் ரெட்டி (Harshad Reddy, Director, Apollo Shine Foundation) மற்றும் இந்திய குழந்தைகள் நோயியல் அகாடமியின் தேசிய தலைவர் டாக்டர் உபேந்திர கிஞ்சவடேகர் (National President – Indian Academy of Pediatrics – Dr Upendra Kinjawadekar) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்தச் சூழலில் விபத்து தொடர்பான காயங்கள் குறித்தும், விபத்துகளைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அப்போலோ ஷைன் அறக்கட்டளை, உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினமான [World Trauma Day] அக்டோபர் 17-ம் தேதி இந்த ’குழந்தைகளுக்கு தலைக்கவசங்கள்’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியது.

“தலைக்கவசத்தைத் தவிர்ப்பதற்காக எந்தக் காரணமும் கூறக் கூடாது – சரியா? கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும்” (நோ எக்ஸ்க்யூஸ் – ஓகே? வியர் எ ஹெல்மெட் – No Excuse OK, Wear A Helmet) என்ற முழக்கத்தையும் கருப்பொருளையும் மையமாகக் கொண்ட வகையில் இந்த இயக்கம் அமைந்திருந்தது. தலைக்கவசத்தால் (ஹெல்மெட்) ஏற்படும் பாதுகாப்பு குறித்து குழந்தைகள் விழிப்புணர்வு பெறவும், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது எப்போதும் தலைக்கவசம் அணியவும், இந்த இயக்கத்தின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, அப்போலோ ஷைன் பவுண்டேஷன் குழுவினர், பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்குத் தலைக்கவசம் (ஹெல்மெட்) வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் சாலைப் பாதுகாப்பு, தலையில் ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் உள்ளிட்ட கருப்பொருள்களில் பதாகைகள் உருவாக்கும் (சுவரொட்டி தயாரித்தல் – Poster-making) போட்டிகளும் நடத்தப்பட்டன.

அப்போலோ ஷைன் பவுண்டேஷனின் இயக்குநர் ஹர்ஷத் ரெட்டி (Harshad Reddy, Director, Apollo Shine Foundation) இந்த இயக்கம் குறித்துக் கூறுகையில், “குழந்தைகளிடையே சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக குழந்தைகளுக்குத் தலைக் கவசங்கள் (ஹெல்மெட்ஸ் ஃபார் கிட்ஸ் – Helmets For Kids) என்ற முன்முயற்சியைத் தொடங்கியதில் அப்போலோ ஷைன் பவுண்டேஷன் மகிழ்ச்சியடைகிறது.

குழந்தைகள்தான் நமது எதிர்காலம். குழந்தைகள் அதிக அளவில் சாலைப் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வு பெறவும், பயணத்தின்போது எளிய, ஆனால் சிறந்த உயிர் காக்கும் நடவடிக்கைகளை பின்பற்றவும் இந்த விழிப்புணர்வு இயக்கம் ஊக்கமளிக்கும். தலைக்கவசம் அணிவதால், தலையில் காயம் ஏற்படும் அபாயத்தை 85 சதவீதம் வரையில் குறைக்க முடியும். பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசு போன்ற பல தரப்பினரை ஒருங்கிணைத்து இந்த விழிப்புணர்வுத் தகவல்களைக் கொண்டு சேர்க்க நாங்கள் பணியாற்றுகிறோம். தனிப்பட்ட நிலையிலும் சமூக நிலையிலும் சிறந்த தாக்கத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் முயற்சித்துள்ளோம்.” என்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது அப்போலோ ஷைன் பவுண்டேஷனும் இநதிய குழந்தைகள் நோயியல் அகாடமியும் (இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் – the Indian Academy of Pediatrics) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. வாழ்க்கை முறை நோய்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், குழந்தைகளிடையே ஆரோக்கியம் தொடர்பான நடைமுறைகளை ஊக்குவிக்கவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போலோ ஷைன் பவுண்டேஷனின் மருத்துவ இயக்குநரும், குழந்தைகள் மருத்துவ நிபுணருமான டாக்டர் இந்திரா ஜெயக்குமார் [Dr Indira Jayakumar, Pediatric Intensivist and Medical Director of the Foundation] பேசுகையில், “ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வதும், இளம் வயதிலேயே ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றுவதும் தொற்றா நோய்களை (என்சிடி – Non Communicable Diseases (NCDs)) எதிர்த்துப் போராட உதவும். கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் நிறைவான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கவும் அது பெரிதும் உதவும்.” என்றார்.

அப்போலோ மருத்துவமனை குறித்து
1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில், உலகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 72 மருத்துவமனைகள், சுமார் 5000 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 1228 மருத்துவ பரிசோதனை மையங்கள், 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது.

ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும், ஒரு மில்லியன் பேருக்கு அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.

கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.

For more information please contact:
APOLLO HOSPITALS I Suganthy S 9841714433
ADFACTORS PR| Timothy J 9962629240 I Anjana Raghu Ram 9677220106