November 28, 2025
  • November 28, 2025
Breaking News
November 26, 2025

அப்போலோ ஹோம் கேர் வெற்றிகரமான 10 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுகிறது!

By 0 24 Views

10 லட்சம் நோயாளிகளுக்கு சேவை, தினமும் 2,000 பேருக்கு வீட்டிலேயே மருத்துவமனை தரத்திலான சிகிச்சை என அப்போலோ ஹோம் கேர் சேவைகளில் புதிய சகாப்தத்தைப் படைத்திருக்கிறது!!

அப்போலோ ஹோக் கேர் [Apollo Homecare] சேவையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
• வீட்டிலேயே வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சையில், மருத்துவ பயனாளர்கள் மருத்துவமனையின் மீண்டும் அனுமதிக்கப்படுவதற்கான மறுசேர்க்கை விகிதம் (Readmission rates) 2%-க்கும் குறைவாக உள்ளது.

• மருத்துவ சிகிச்சை நெறிமுறைகள் (Protocols) 95% மிகச்சரியாகப் பின்பற்றப்படுகின்றன.

• 3,000-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற மருத்துவ பராமரிப்பாளர்கள் மற்றும் 2 கோடிக்கும் அதிகமான மணிநேர செவிலியர் (Nursing) சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

• தொழில்நுட்ப உதவியுடன் கூடிய இச்சேவை, கடந்த 10 ஆண்டுகளாக உலகத் தரத்திலான மருத்துவ விளைவுகளை வழங்கி வருகிறது.

சென்னை, நவம்பர் 26, 2025: இந்தியாவின் முன்னோடித்துவமிக்க, முறைசார்ந்த வீட்டு சிகிச்சை சேவை நிறுவனமும் [home healthcare provider], அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு பகுதியுமான ‘அப்போலோ ஹோம் கேர்’ (Apollo Homecare), இன்று தனது வெற்றிகரமான 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 2015-ம் ஆண்டில், அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக, மருத்துவமனையிலிருந்து தங்களது இல்லங்களுக்குத் திரும்பிய நாள்பட்ட நோய்களுள்ள மருத்துவ பயனாளர்களுக்கான சிகிச்சையில் நிலவும் இடைவெளியை நிரப்புவதற்காக அப்போலோ ஹோம்கேர் தொடங்கப்பட்டது. அப்போலோ ஹோம்கேர், கடந்த பத்து ஆண்டுகளாக, நாடு முழுவதும், மருத்துவ பயனாளர்களுக்கு, அவர்களின் இல்லங்களிலேயே தடையற்ற மற்றும் மருத்துவமனைக்கு இணையான தரத்தில் சிகிச்சைகளை வெற்றிகரமாக வழங்கி வருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில், அப்போலோ ஹோம்கேர் இந்தியாவின் மிகவும் விரிவான முறை சார்ந்த வீட்டு சிகிச்சை தளமாக உருவெடுத்துள்ளது. இது 16-க்கும் மேற்பட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகளுடன், மருத்துவ நடைமுறைகளின் அடிப்படையில் இயக்கப்படும், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை சேவைகளை வழங்குகிறது. ஆரம்பத்தில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய மருத்துவ பயனாளர்களுக்கான மருத்துவ பராமரிப்பை வழங்கும் தளமாக தொடங்கப்பட்ட இந்த சேவை, இன்று ஒரு தேசிய அளவிலான ஒரு முழுமையான சுகாதார சூழல் அமைப்பாக (Ecosystem) விரிவடைந்துள்ளது. மேலும் மருத்துவ பயனாளர்களின் வீட்டில் வைத்தே சிறந்த முடிவுகளைத் தரக்கூடிய சிகிச்சை தீர்வுகளை வழங்குகிறது.

அப்போலோ ஹோம் கேரின் மருத்துவ முடிவுகள் (Clinical outcomes) உலகத் தரத்தை பிரதிபலிக்கின்றன. பல முக்கிய சிகிச்சை திட்டங்களில் மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கும் விகிதம் தொடர்ந்து 2%-க்கும் குறைவாகவே உள்ளது. இது இத்துறையின் மற்ற அளவீடுகளை விட மிகக் குறைவு. நாள்பட்ட நோய் நோய் பராமரிப்பில் 95% மருத்துவ சிகிச்சை நெறிமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சிகிச்சையின் முடிவுகள் அனைத்தும் நேரடியான மருத்துவ கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மூலம் சேவைகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது. இதனால் மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் முறை சார்ந்த வீட்டு மருத்துவ பரமாரிப்பில் அப்போலோ ஹெல்த்கேரின் மருத்துவ ஆளுமை மற்றும் இல்லங்களில் மருத்துவமனைக்கு நிகரான சிகிச்சையை வழங்கும் அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

அப்போலோ ஹோம்கேர் தற்போது தினமும் 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கி வருகிறது.. இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ பயனாள\ர்களுக்கு சேவை அளித்துள்ளது.. உயர் மட்ட நர்சிங் சிகிச்சை மட்டும் எடுத்துகொண்டால், முக்கியமான மற்றும் சிக்கலான மருத்துவ பயனாளர்களுக்கு 2 கோடிக்கும் அதிகமான செவிலியர் சிகிச்சை மணிநேரங்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தப் பத்தாண்டுகளில், பயிற்சி பெற்ற செவிலியர்கள், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், உணவு வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்கள் [nurses, physiotherapists, doctors, dieticians, counsellors] உள்ளிட்ட 30,000-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அப்போலோ ஹோம்கேரின் நிபுணத்துவ சேவைகள் மூலம் பணியமர்த்தப்பட்டு, பயனடைந்துள்ளனர்..

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், டாக்டர் பிரதாப் சி. ரெட்டி [Dr Prathap C. Reddy, Founder & Chairman, Apollo Hospitals Group] அவர்கள் கூறுகையில், “”பத்தாண்டுகளுக்கு முன்பு, அப்போலோ மருத்துவமனை அளிக்கும் மருத்துவ சிகிச்சைகளின் தரத்திலான அதே சிகிச்சையை மக்களின் இல்லங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லும் ஒரு புரட்சிகரமான முயற்சியாக இதை நாங்கள் தொடங்கினோம். இன்று, இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைச் சென்றடையும் சக்திவாய்ந்த இந்தச் சேவை, நாட்டின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளுக்கேற்ப விரிவுப்படுத்தக்கக்கூடிய, எல்லோருக்கும் ஏற்ற மலிவான கட்டணத்திலான தீர்வாக உருவெடுத்துள்ளது. இந்த மைல்கல், இந்தியாவின் ‘3H எதிர்காலம்’ (Health and Happiness at Home) அதாவது ‘வீட்டிலேயே ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி’ என்ற எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இந்த முறை சார்ந்த வீட்டு சிகிச்சை நமது நாட்டின் சுகாதார முறையின் மையப்புள்ளியாக மாறும் என்பதில் எனக்குள்ள நம்பிக்கையை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.” என்றார்.

அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாக துணைத் தலைவர், டாக்டர் ப்ரீதா ரெட்டி [Dr Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals] அவர்கள் பேசுகையில், “மருத்துவமனைகளுக்கு அப்பாலும் மருத்துவ பயனாளர்களின் அனுபவத்தை மறுவரையறை செய்வதில் அப்போலோ ஹோம்கேர் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 10 ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த வெற்றிகரமான பயணத்தில், சிகிச்சையின் தொடர்ச்சியை வலுப்படுத்துவதிலும், முறை சார்ந்தவீட்டு மேம்பட்ட சிகிச்சை மாதிரிகளை விரிவுபடுத்துவதிலுமே எங்களது கவனம் உள்ளது. எதிர்கால மருத்துவம் என்பது வீடுகளை மையமாகக் கொண்டே அமையும், அந்த மாற்றத்தை அப்போலோ தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்.” என்றார்.

அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர், டாக்டர் சுனீதா ரெட்டி [Dr Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals] அவர்கள் கூறுகையில், “அப்போலோவின் அடுத்த கட்ட வளர்ச்சியில் ஹோம்கேர் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும்.. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லும் சிகிச்சையைத் தடையற்றதாக மாற்றுவதே எங்கள் நோக்கமாகும். புவியியல் எல்லைகளைக் கடந்து, இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த முறை சார்ந்த வீட்டு மருத்துவ பராமரிப்பு மாதிரியை விரிவுபடுத்தத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ திறன்களைக் கட்டமைப்பதில் நாங்கள் அக்கறையுடன் ஈடுபட்டு வருகிறோம். கண்ணியமிகுந்த பராமரிப்பு, ஆறுதல் அளிக்கும் சிகிச்சைகள் மற்றும் தொடர்ச்சியான கவனிப்புடன் கூடிய சிகிச்சையே சிறந்தது என்பதற்கு அப்போலோ ஹோம்கேரின் இந்த வெற்றியே சாட்சியாக அமைந்திருக்கிறது.” என்றார்.

அப்போலோ ஹோம்கேரின் விரிவான சேவைகளின் பட்டியலில், வீட்டில் இருந்தபடியே தீவிர மருத்துவ மேற்பார்வை தேவைப்படும் மருத்து பயனாளர்களுக்கு மருத்துவர் வழிகாட்டுதலின் அடிப்படையிலான ICU-நிலை கண்காணிப்பு, வீட்டு நோயறிதல் சேவைகள், இயன் முறை சிகிச்சை, மருத்துவ உபகரணங்களை வாடகைக்கு வழங்குதல், மருத்துவ ஆலோசகர் வீட்டிற்கு வந்து மருத்துவ பயனாளரைப் பார்க்கும் வசதிகள் மற்றும் பெரியவர்களுக்கான தடுப்பூசிகள் போன்ற தடுப்பு சேவைகள் ஆகியவை அடங்கும். சான்றளிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், டிஜிட்டல் ஆவணப்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான தொலைதூர மருத்துவ மேற்பார்வை ஆகியவற்றின் மூலம், பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வீட்டு சிகிச்சைக்கான தேசிய தரங்களை அப்போலோ ஹோம்கேர் நிர்ணயித்துள்ளது.

ஒரு வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பு அதன் சேவைகளை எல்லோருக்கும் வழங்கும் விநியோக அமைப்பின் அடிப்படையாக உள்ளது. அப்போலோ ஹோம்கேரின் சொந்த டிஜிட்டல் தளம், நிகழ் நேரத்தில் நேரடியாக முக்கிய உறுப்புகள் மீதான கண்காணிப்பு, சிகிச்சை முடிவுகளைக் கண்காணிக்கும் வசதி, பணிப்பாய்வு எச்சரிக்கைகள் மற்றும் முதன்மை சிகிச்சை மருத்துவர்களுடன் இடைவிடாத ஒருங்கிணைப்பு ஆகியவற்றைச் சாத்தியமாக்குகிறது. மேலும் சிகிச்சையின் தொடர்ச்சியையும் சரியான நேரத்தில் மருத்துவ முடிவுகளை எடுப்பதையும் உறுதி செய்கிறது.

அப்போலோ ஹோம்கேர் தனது அடுத்தக்கட்ட பயணத்தில், தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் சந்தையை விரிவுபடுத்துதலில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. மேலும் இந்தியாவின் வளர்ந்து வரும் முறை சார்ந்த வீட்டு சிகிச்சைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வலுவான விநியோக இயந்திரத்தைக் கட்டமைப்பதிலும் அக்கறை காட்டி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மருத்துவ கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் வழிமுறைகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இந்தியா முழுவதும் தரமான முறை சார்ந்ர்ஹ வீட்டுச் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதே இதன் இலக்காக அமைந்திருக்கிறது.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264–க்கும் அதிகமான கிளினிக்குகள், 2,182 பரிசோதனை மையங்கள் மற்றும் 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000—க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.

For more Information please contact:
APOLLO HOSPITALS I Suganthy 9841714433
ADFACTORS PR| Timothy J 9962629240 | Sarath Kumar 9551785252 | Shiva J 8428537322