October 10, 2024
  • October 10, 2024
Breaking News
March 5, 2020

கொரானோ வைரஸ் பீதியில் பின்வாங்கிய அண்ணாத்த

By 0 825 Views

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில ரஜினி நடிக்க சிவா இயக்கத்தில் உருவாகும் படம் ‘ அண்ணாத்த…’

இந்தப்படத்தின் முதல் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கு பதிலாக ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிற து.

இதற்காக ராமோஜிராவ் திரைப்பட நகரில் வட மாநில அரங்குகல்  அமைக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல்.

ஜாக்கிரத அண்ணாத்த…