October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகை நிலாவுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் – போலீஸில் புகார்
June 5, 2020

நடிகை நிலாவுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் – போலீஸில் புகார்

By 0 745 Views
Actress Nila

Actress Nila

நடிகை நிலாவை நினைவு இருக்கிறதா..? 

தமிழில் மருதமலை, அன்பே ஆருயிரே, ஜாம்பவான், காளை, கில்லாடி உள்ளிட்ட படங்களில் நிலா நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் மீரா சோப்ரா என்று அறியப்பட்டவர்.

சமீபத்தில் அவர் ஆன்லைன் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், தெலுங்கில் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் பற்றி உங்கள் கருத்து என்ன? என கேட்டிருந்தார். அதற்கு அவரை பற்றி எனக்கு தெரியாது. நான் அவரது ரசிகை கிடையாது என நிலா பதிலளித்தார்.

உடனே ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து, நிலாவை வசைபாட துவங்கினர். சிலர் அவரை மிரட்டும் தொனியிலும் கருத்துகளை பதிவிட்டனர்.

இது பற்றி நிலா கூறும்போது, “ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. சிலர் பலாத்கார மிரட்டல் விடுத்தனர். மேலும் சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது பற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது ஜூனியர் என்டிஆரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என தெரிவித்துள்ளார்.