பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மானுடன் வீர்காடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா தட்வால்.
இப்போது கணவருடன் கோவா வில் வசிப்பவர் வறுமையில் வாடுகிரார். இந்நிலையில் கடும் காய்ச்சலில் இருப்பவர் அது கொரோனாவாக இருக்கக் கூடும் என்ற ஐயத்தில் உள்ளார்.
salman-poojadadwal
ஆனால் டெஸ்ட் செய்வதற்கு கூட அவர் பணமில்லாமல் சிரமத்தில் உள்ளதாகவும் அவர் அதற்காக சல்மானிடம் உதவி கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சல்மான்கான் தனக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதாகவும், இப்போது கோவாவில் தங்களை குடி வைத்ததும் கூட அவர்தான் என்று கூறும் பூஜா, ” அவரை விட்டால் எங்களுக்கு உதவ ஆளில்லை…” என்று கூறுகிறார்.
சல்மான் மீண்டும் மனது வைத்தால் பூஜா மீண்டு எழலாம்.