July 5, 2025
  • July 5, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 3 மாத சம்பளத்தை முன்பே கொடுத்து விதியை மதியால் மாற்றிய உல்டா நாயகன்
June 18, 2020

3 மாத சம்பளத்தை முன்பே கொடுத்து விதியை மதியால் மாற்றிய உல்டா நாயகன்

By 0 595 Views

நாடெங்கும் லாக் டவுன் காரணத்தால் வருமானம் இல்லாமல் தனி நபர்கள் மட்டுமலலாமல் நிறுவனங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காமலும் சம்பளத்தில் வெட்டு செய்தும் வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த செய்தி உங்கள் காதுகளில் தேனை பாய்ச்சும்.

டார்லிங் – 2′ விதிமதி உல்டா போன்ற படங்களை தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவத்தின் மூலம்தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் ரமீஸ்ராஜா.

இவர் தன்னுடைய நிறுவனத்தில்( ரைட் ரூப்&அல்லய்டு புரொடக்ட்ஸ் (பி) லிமிடெட்) பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்த லாக் டவுன்சூழ் நிலையில் உதவுகின்ற வகையில் 3 மாத சம்பளத்தை முன்பாகவே கொடுத்து உதவி இருக்கிறாராம்.

எல்லாவற்றையும் உல்டாவாகவே செய்யும் விதி மதி உல்டா நாயகனுக்கு வாழ்த்துக்கள்..!