November 14, 2024
  • November 14, 2024
Breaking News
June 19, 2020

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம்

By 0 485 Views

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர்  ‘சச்சி ‘க்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்ததும், அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருப்பதையும் சில தினங்கள் முன்பு செய்தியாக வெளியிட்டோம்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் அவர் நிலைமை 48 முதல் 72 மணி நேரங்கள் கழித்து தான் தெரியவரும் என்று மருத்துவமனையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் நேற்று சிகிச்சை பலன் தராமல் சச்சி மரணம் அடைந்தார்.

அவருக்கு கேரள திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்க ளும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.