கதையின் நாயகன் சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளில் பிரபல இயக்குனரும் , நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்கள் ரிலீஸ் செய்த “லூ” பட முதல் போஸ்டர்..!
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்த மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தை இந்தத் திரைப்படத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
பல்வேறு ஆவண படங்களை தயாரித்து இயக்கிய கோகுல்ராஜ் மணிமாறன் இந்த படத்தையும் எழுதி இயக்கி இருக்கிறார்.
பல்வேறு நிஜ சம்பவங்களை உள்வாங்கி அதை மிகச்சிறந்த படமாக உருவாக்கி இருக்கிறார்.
ஹரா, கிறிஸ்டினா கதிர்வேலன் உட்பட பல படங்களில் பணிபுரிந்த பிரகத் முனியசாமி தன் கேமரா மூலமாக மிக யதார்த்தமாக கொடைக்கானல் மலை அழகையும், அந்த மக்களின் வலியையும் காட்சிப் படுத்தியுள்ளார்.
விரைவில் சர்வதேச விருதுகள் வழங்கும் விழாக்களில் பங்கேற்க உள்ள இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளை முன்னிட்டு “லூ” படத்தின் 1st look வெளியிடப்பட்டது.
சந்தோஷ் பிரபாகர், கிலைட்டன், அலெக்ஸ்பாண்டியன், வைணவஸ்ரீ, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரமாண்ட தயாரிப்பாளரும் நடிகர் இயக்குனருமான தியாகராஜன் “லூ” பட போஸ்டரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்.
இயக்குனர் கோகுல்ராஜ் மணிமாறன், கேமராமேன் பிரகத் முனியசாமி, எடிட்டர் லோகேஷ், ஹீரோ சந்தோஷ் பிரபாகர் மற்றும் தயாரிப்பு மேற்பார்வையாளர் சதீஷ்குமார் ஆகிய அனைவரையும் தனித்தனியாக அழைத்து பாராட்டினார் இயக்குனர் தியாகராஜன்.
இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.