எங்கு பார்த்தாலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் என்று பரவி வரும் நிலையில் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் விசேஷ வார்டுகள் இதற்கென்று நிறுவப்பட்டுள்ளன.
எந்த நோயும் ஆள் பார்த்தோ அந்தஸ்து பார்த்தோ வருவதில்லை. அதுபோல்தான் நடிக, நடிகையரும் கூட எந்த நோய்க்கும் விதிவிலக்கில்லை.
இப்போது பிரபல நடிகர் சரவணனுக்கு இந்தப் பன்றிக் கய்ச்சல் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
saravanan
பல ஆண்டுகள் முன்பே சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருந்தாலும் பாலாவின் ‘நந்தா’ படத்தில் மறுபிறவி எடுத்த சரவணன், அமீரின் ‘பருத்தி வீரனி’ல் இருந்து பரபரப்புக்குள்ளானார்.
இப்போதும் பல படங்களில் நடித்து வரும் அவர் தன் சொந்த ஊரான சேலத்துக்கு தீபாவளி கொண்டாடப் போனார். அங்கு காய்ச்சல் ஏற்பட்டு மூன்று நாட்கள் காய்ச்சல் தீராத நிலையில் ரத்தப்பரிசோதனை செய்ததில் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் அறிகுறி தெரிய வந்திருக்கிறது.
உடனே சென்னைக்கு விரைந்த அவர், இங்கே தனியார் மருத்துமனயில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு தொழில் சார்ந்த ஏரியாவில் ஒருவருக்கு இதுபோன்ற நோய்கள் ஏற்பட்டால் அதே ஏரியாவில் இருக்கும் மற்றவர்களுக்கும் இது பரவும் ஆபத்து உள்ளதால் கோலிவுட்டில் இந்த பன்றிக் காய்ச்சல் பயம் பரவ ஆரம்பித்திருக்கிறது.
சரவணன் விரைவில் நலம் பெறட்டும்..!