January 23, 2026
  • January 23, 2026
Breaking News
February 9, 2019

ஆபாசப் படத்தில் ஓவியா – 90 எம்எல் டிரைலர் சர்ச்சை

By 0 1627 Views

சமீப காலமாக அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாசப் படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஹாலிவுட்டில் இப்படி ‘ரொமான்டிக் ஜேனர்’ படங்கள் வருகின்றன என்று காரணம் காட்டி இப்படிப்பட்ட படங்களை எடுத்து வருகின்றனர். இவற்றை சென்சாரும் அனுமதித்து வருகிறது.

இந்நிலையில் ‘ஆணென்ன, பெண்ணென்ன ஆபாசத்தில்…’ என்கிற கதையாக பெண் ஒருவர் புனைபெயரில் இயக்கும் ’90 எம்எல்’ என்ற படம் தயாராகி வருகிறது. ‘பிக் பாஸ்’ என்ற மூன்றாம் தர பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் இளைஞர்களின் ரோல் மாடல் (கஷ்டகாலம்..!) என்று பெயரெடுத்து, வீணாய்ப்போன இளைஞர் பட்டாளம் ஆர்மி வைக்கும் அளவுக்குப் போன ஓவியாதான் இதில் நாயகி. 

அது ஒன்றே ‘ஆக்ஸ்போர்ட் சான்றிதழ்’ போல என்று ஓவியாவும் அதற்குப்பின் புதுமைப்பெண் என்கிற போர்வையில் அரை மென்டல் போலவே பொது இடங்களில் நடந்து கொள்ள, பாழாய்ப்போன இளசுகள் அதை ஆகா, ஓகோவென கொண்டாடின.

இது தந்த தைரியத்தில் ஓவியா நடித்த அல்லது ஓவியாவை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இந்த ’90 எம்எல்’. இதன் டிரைலர் நேற்று வெளியாகி பயங்கர வைரலாகிக் கொண்டிருக்கிறது. கூடவே பலவித சர்ச்சைகளையும் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ‘வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவும்’ என்ற அறிவிப்புடன் வெளியாகியதே கூடுதலாக ‘கிக்’கை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

போதாக்குறைக்கு இந்த போதைப்படத்துக்கு சிம்பு இசையமைத்ததில் ‘இனம் இனத்தோடுதான்’ என்று புரிய வைத்திருக்கிறார்கள். ஒருபக்கம் டிரைலர் வைரலானாலும் இன்னொரு பக்கம் இதைக் கண்டித்தும் சமூக வலைதளங்களில் கட்டி ஏறிக்கொண்டிருக்கிறார்கள். 

கீழே காணும் டிரைலர் முழுக்க மது போதை, கஞ்சா என்றும், வசனங்களில் “…த்தா”, “மேட்டர்” என்று பேசிக்கொண்டும் லிப்லாக்கை மீறிய மிருக முத்தம் இட்டுக்கொண்டும் இருக்கிறார் ஓவியா. இதைத்தான் இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்றால் அந்த கண்றாவியை ‘ஓவியா ஆர்மி’யினர் குடும்பத்தோடு கண்டுகளித்து படத்தை வெற்றியடையச் செய்ய வாழ்த்துகிறோம்..!