November 25, 2024
  • November 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • உலகதரத்தில் உரிமையுடன் 50 லட்சம் இசை டிராக்குகள் ரெடி
January 30, 2020

உலகதரத்தில் உரிமையுடன் 50 லட்சம் இசை டிராக்குகள் ரெடி

By 0 577 Views

இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்குத் துறையில் சினிமா மட்டுமல்லாது வெப் தொடர்களும் குறும்படங்களும் விளம்பரங்களும் வேறு சில கலைப் படைப்புகளுமாக படைப்புலகம் விரிந்துகொண்டே போகிறது.

அவற்றுக்கான தொழில்நுட்ப தேவைகளும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு வருகின்றது. அந்த தேவைகளுக்காக முறையின்றி அனுமதி பெறப்படாத படைப்புகளை வேறு படைப்புகளில் இருந்து எடுத்தாளும்போது அனுமதி பெறாதவை நிராகரிக்கப்படும் சூழலும் இருந்து வருகிறது.

அதன்பிறகு சட்ட ரீதியான சிக்கல்களும் அவமானங்களும் படைப்பாளிகளை நோக்கி திரும்புகின்றன. இந்த தேவைகளுக்காக புதிதாக சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

இதில் இசை துறையை பொறுத்த அளவில் உலக தரத்திலான இசையை முறையாக அனுமதி பெற்று தரக்கூடிய வகையில் ‘லேகா மியூசிக்’ நிறுவனம் 50 லட்சம் உலகத்தரம் வாய்ந்த மியூசிக் வகைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

உலகின் புகழ்பெற்ற இசை நிறுவனங்கள் உருவாக்கிய 50 லட்சம் இசை டிராக்குகள் இந்த நிறுவனத்தில் தற்போது இருக்கின்றன. இவை அனைத்தும் முறைப்படி உரிமை பெற்றவை. இவை தவிர தொடர்ந்து பல்வேறு நாடுகளிலுள்ள இசை நிறுவனங்கள் உருவாக்கும் இசை டிராக் குகளும் இந்நிறுவனத்தின் இசை பெட்டகத்தில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த இசை டிராக்குகளை இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள், குறும்படங்கள், வெப் சீரியல்கள், விளம்பரப்படங்கள் ஆகியவற்றுக்கு முறையான உரிமை பெற்று அவற்றின் தயாரிப்பாளர்கள் அதற்கான தொகையை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Lekha Music Lekha Rathnakumar

Lekha Music Lekha Rathnakumar

புகழ் பெற்ற விளம்பர பட இயக்குனரான லேகா ரத்னகுமார் தலைவராக இருக்கும் லேகா மியூசிக் இந்த சாதனைகளை படவுலகில் செய்துகொண்டிருக்கிறது.

முறையான உரிமை பெறாமல் எங்கோ கிடைக்கக்கூடிய அல்லது எடுத்தாளக் கூடிய இசையை திரைப்படங்களிலும் வேறு பல கலை படைப்புகளை யாராவது பயன்படுத்தினால் அதை யூடியூப், முகநூல் ஆகியவை நிராகரித்து விடுவதுடன் அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்தையே அவற்றிலிருந்து நீக்கிவிடும் சூழலும் நீதிமன்றம் செல்ல கூடிய சூழலும் இன்று உருவாகி வருகிறது.

இந்நிலை வராமல் இருக்க வேண்டுமானால் முறைப்படி இசைக்கான உரிமையை பெற்று அதற்கான கட்டணத்தைச் செலுத்தி ‘லேகா மியூசிக்’ நிறுவனத்தின் இசையை பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் பிரச்சனை இல்லாதது.

‘லேகா மியூசிக்’ நிறுவனம் இந்தியாவிற்கான இசை உரிமை பெற்றிருக்கும் இசை நிறுவனங்களில் உலகப்புகழ் பெற்ற ஒரு நிறுவனம் ‘சோனாட்டன்’, ஜெர்மனியைச் சேர்ந்த அந்நிறுவனம் உருவாக்கிய இசை வகைகளில் சமீபத்தில் திரைக்கு வந்த பல ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த தகவல்களை நம்மிடம் கூறிய லேகா ரத்னகுமார், “லேகா மியூசிக் நிறுவனம் இந்திய பட உலகுக்கு கிடைத்திருக்கும் கொடை. புதுமைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் படவுலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முறையான உரிமை பெற்று நாங்கள் வைத்திருக்கும் உலக இசையை தங்களின் படைப்புகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம் உலக நாடுகள் பலவற்றின் இசை டிராக்குகள் கொண்ட நம் கலைப் படைப்பு உலகத் தரத்தில் இருக்கும்..!” என்கிறார்.

லேகா மியூசிக் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒலிப்பதிவு கூடம் சென்னை போரூரில் இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அங்கேயே வந்து தங்களின் படைப்புகளுக்கு ஒளிப்பதிவு செய்து கொள்ளவும் முடியும்.

‘லேகா மியூசிக்’கின் இசையை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் 98411 25959, 98401 25959 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது lrk@lekhamusic.com என்று மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

பாரம் இல்லாத பாதுகாப்பான இசைக்கு இதை விட சிறந்த வழி வேண்டுமா?