October 26, 2025
  • October 26, 2025
Breaking News

ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது

By on January 21, 2020 0 621 Views

துக்ளக் இதழின் பொன் விழாவையொட்டி நடந்த விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரஜினிகாந்தை திராவிடர் கழக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் அவரது போயஸ் கார்டன் வீட்டை ஜனவரி 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த தேதியை மாற்றி 21 ஜனவரி (இன்று) காலை 10 மணிக்கு ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் இன்று காலை ரஜினிகாந்த் தான் பேசிய விஷயத்துக்கு மன்னிப்புக் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் நான் நடந்த விஷயங்களை மட்டுமே ஆதாரத்தின் அடிப்படையில் கூறி இருக்கிறேன் அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 50 பேரை ரஜினிகாந்தின் இல்லத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பே கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.

அந்த வீடியோ கீழே…