November 25, 2024
  • November 25, 2024
Breaking News
February 3, 2020

கொரானோ மொத்த மரணம் 361 ஒரே நாளில் 57 பேர் பலி

By 0 779 Views
எதைத்தான் தின்பது என்ற விவஸ்தை இல்லாத சீனர்களால் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரானோ வைரஸ்.

வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது.
 
கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது. அதில்

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.  

சீனாவிலிருந்து இந்த கொடூர வைரஸ் தாக்குதல் தற்போது உலகின் 20-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதில் இந்தியாவும், அமெரிக்காவும் அடங்கும்.
 
உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 17,205 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
 
கொரானோ பாதித்ததாக சந்தேகப்படும் 21,558 பேர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.