May 8, 2024
  • May 8, 2024
Breaking News

Monthly Archives: September 2022

பணம் முக்கியமில்லை – பஞ்ச் லைனுடன் பனாரஸ் டிரால் பாடல் வெளியானது

by on September 17, 2022 0

ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ட்ரால் என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார். ஜெஸ்ஸீ கிஃப்ட்டின் கிறங்கடிக்கும் குரல் பார்ட்டி பாடலுக்கு கூடுதல் சிறப்பு […]

Read More

வெந்து தணிந்தது காடு திரைப்பட விமர்சனம்

by on September 17, 2022 0

இலக்கியத்தில் பெயர் வாங்கியவர்கள் சினிமாவுக்குள் வரும்போது அது வெற்றி பெறாது என்றொரு எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. அந்த எண்ணத்தை மெதுமெதுவே சுஜாதா மாற்றிக் காட்டினார். அதற்குப் பிறகும் பல எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் வந்து கொண்டிருந்தாலும் சுஜாதா பெற்ற வெற்றியை இவர்களால் பெற முடியவில்லை என்பது உண்மை. அந்த வகையில் இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கைகோர்த்து இருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு ஆளுமைகள் ஒன்று சேரும்போது என்ன நடக்குமோ அது நடந்திருக்கிறது. […]

Read More

சினம் திரைப்பட விமர்சனம்

by on September 16, 2022 0

அனுபவ நடிகர் விஜயகுமார் தன்மகன் அருண் விஜய்க்காக தயாரித்திருக்கும் படம் இது. அப்பாவைப் போலவே சினிமா துறையில் நல்ல பெயர் எடுத்த அருண் விஜய் திறமையிலும் அவருக்கு குறைந்தவர் இல்லை என்று இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார். ஏற்கனவே அழகியலோடு அருமையான படங்களைத் தந்த ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கி இருக்கும் படம் இது என்பதால் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது நிஜம். அந்த எதிர்பார்ப்புக்கு சற்றும் குறை வைக்காமல் முதல் காட்சியில் இருந்து பரபரப்பின் […]

Read More

சர்வதேச பட விழாக்களில் விருதுகள் வென்ற குழலி செப் 23 இல் வெளியீடு

by on September 16, 2022 0

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் செரா கலையரசன் இயக்கத்தில் உருவான படம் ‘குழலி’. ‛காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஆரா நடித்துள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்ற இந்தபடம் இண்டோ பிரஞ்ச் பிலிம் திரைப்பட விழாவில் சிறந்த படம், இசைக்கான விருதுகளை வென்றுள்ளது. குழலி படத்திற்கு உதயகுமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தாலும் பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கேற்றதால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமானதாம். இந்த […]

Read More

ஸ்டடி ஆஸ்திரேலியா கண்காட்சி மற்றும் விளம்பர பிரச்சாரம்

by on September 16, 2022 0

ஸ்டடி ஆஸ்திரேலியா கண்காட்சி, மாணவர்கள், கல்வித் தலைவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. இந்த விளம்பர பிரச்சாரம், ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றல் பற்றிய பொருத்தமான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ● மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித் தலைவர்களுக்கு அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் ஊடாடுவதற்கும், படிப்புகள், விசாக்கள் மற்றும் உதவித்தொகைகள் குறித்த அவர்களது சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது. ● ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல்வேறு விருப்பங்களிலிருந்து மாணவர்கள் […]

Read More

‘சினம்’ அருண் விஜய்யின் அதிரடி காட்டி 16-ல் வெளியாகிறது

by on September 14, 2022 0

மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள புதிய படம், `சினம்’. அருண் விஜய் கதாநாயகனாகவும், பாலக் லால்வானி கதநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். முன்னணி நடிகர்நடிகைகள் நடித் துள்ளனர். ‘சினம்’ படம் குறித்து படக் குழுவினர் கூறியதாவது: கிரைம் திரில்லர் கதையில் மிகைப் படுத்தாத எதார்த்தமான கதாபாத்திரங்கள் அமைத்து மக்கள் ரசிக்கும்படி ‘சினம்’ படம் உருவாகியிருக்கிறது. இந்த கதையை கேட்டவுடன் அருண் விஜய், தான் இதுவரை நடித்திராத கேரக்டராகவும், முற்றிலும் மாறுபட்ட யதார்த்தமான கதாபாத்திரமாகவும் […]

Read More

அருண் விஜய்யும் நானும் காத்திருந்து இணைந்தோம் – ஜிஎன்ஆர் குமரவேலன்

by on September 14, 2022 0

ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது.   செப்டம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எமோஷனல் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தின் அனுபவம் குறித்து இயக்குநர் குமரவேலன் பகிர்ந்து கொண்டது, “’சினம்’ […]

Read More

ஆர்எம்கேவியின் இயற்கை சாயம் மற்றும் எடை குறைந்த லினோ பட்டுச் சேலைகள்

by on September 14, 2022 0

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் கலெக்ஷன் ஆகும். 1856-ல் செயற்கை முறையில் சாயமிடுதல் அறிமுகப்படுத்தப்படும் வரை அனைத்து இழைகளும் இயற்கை முறையிலேயே சாயமிடப்பட்டு வந்தன. செயற்கைச் சாயங்கள் வசதியாகவும், செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் விரைவிலேயே அவை இயற்கை உட்பொருட்களுடன் கூடிய நிறமூட்டிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டன. செயற்கைச் சாயங்கள் காரணமாக நச்சுக் கழிவுகள் ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுவது தற்போது கண்கூடாக அனைவராலும் உணரப்படுகிறது. இயற்கை […]

Read More

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் – அப்போலோ மருத்துவமனையின் நவீன இடையீட்டு சிகிச்சை

by on September 14, 2022 0

அப்போலோ மருத்துவமனை ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனால் (Atrial Fibrillation) பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளைக் காப்பாற்ற புதிய இடையீட்டு சிகிச்சை நடைமுறைகளை (novel interventional procedures) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது! சென்னை, 14 செப்டம்பர் 2022: சென்னை அப்போலோ மருத்துவமனை க்ரையோ பலூன் அப்லேஷன் (“Cryo Balloon Ablation”) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து சிகிச்சை மேற்கொள்கிறது. இந்த நடைமுறை ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial Fibrillation) எனப்படும் சிக்கலான மற்றும் பொதுவான இதயத் துடிப்புக் கோளாறுக்கு தீர்வை வழங்குகிறது. சென்னையில் 64 வயது […]

Read More

அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது

by on September 14, 2022 0

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. . நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவை தேர்தலில் களமிறங்கின. இந்நிலையில், கட்சிகள் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து உரிய விசாரணை நடத்தி அதனடிப்படையில் பல்வேறு […]

Read More