May 11, 2024
  • May 11, 2024
Breaking News

Monthly Archives: April 2020

சிகிச்சை மறுக்கப்பட்டால் புகாரளிக்க…

by on April 12, 2020 0

மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் என்பதற்காக சிகிச்சை மறுக்கப்பட்டாலோ, மருத்துவரை அணுக விடாமல் தடுக்கப்பட்டாலோ உடனடியாக அதை வீடியோ பதிவு செய்யாமல்…. மருத்துவமனை குறித்த தகவல்களுடன் சுகாதாரத்துறை இணையதளத்தில் கூடுமானவரை நிறைய தடவை புகார் பதிவு செய்யுங்கள். இமெயிலிலும் புகார் நிறப்பலாம். அரசு மருத்துவமனைகளை பற்றி இதுபோன்ற புகார் அளிக்க 104 என்கிற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். இது 24 மணிநேர சேவை ஆகும். //stopcoronatn.in/ இந்த இணையதளத்தில் — பத்து தொலைப்பேசி தடங்கள் உண்டு. அவற்றில் […]

Read More

வைரல் ஆகிவரும் நடிகைகளின் சேலஞ்ச் வீடியோ

by on April 12, 2020 0

சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆகி விடும்.. அதாவது ஐஸ் பக்கெட், பாட்டில் மூடி சேலஞ்ச் போல சமீபத்தில் டி-ஷர்ட் சேலஞ்ச் ஒன்று வைரலாகி வருது. அதாவது, வழக்கமாக டீசர்ட் அணியும் முறையை மாற்றி, கைகளை தரையில் ஊன்றி, கால்களை சுவற்றில் பதித்து தலைகீழாக நின்றபடி டீசர்ட் மாட்டிக்கொள்வது தான் இந்த சவால். இதில் சினிமா நடிகைகள் ரொம்ப மெனக்கெட்டு முயற்சி செய்து அதை நிறைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் நடிகைகள் மந்த்ரா […]

Read More

உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் – முக ஸ்டாலின் கடிதம்

by on April 12, 2020 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன்னர் தனியார் தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்களை தாங்களாகவே விநியோகம் செய்ய கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். […]

Read More

நீட்டிக்கப் படும் ஊரடங்கில் மேற்கொள்ளப் படும் மாற்றங்கள்

by on April 12, 2020 0

இந்த மாதம் இறுதிவரை நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கில் பல்வேறு மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் நோயாளிகள், பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு ஏற்ப சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என பிரித்து ஊரடங்கை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஊரடங்கில் பொருளாதார சுழற்சி பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளது. புதிய திட்டத்தின்படி நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். […]

Read More

அஜித் பாணியிலேயே உதவிய அஜித் பட நாயகி

by on April 11, 2020 0

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘என் கிட்ட மோதாதே’ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்த பார்வதி நாயர் அஜித் பாணியிலேயே அனைத்து தரப்பினருக்கும் உதவியிருக்கிறார். பெப்ஸி அமைப்புக்கு 1500 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதோடு, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும் நன்கொடை வழங்கியிருக்கிறார்.     அத்துடன் சம்பளம் இல்லாமல் அவதியுறும் சினிமா பத்திரிகையாளர்களின் […]

Read More

அலுப்பூட்டும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தொடர்கள் – பிசி ஸ்ரீராம்

by on April 11, 2020 0

கொரோனா பீதியால் ஊரடங்கு அமலில் இருக்க  தொலைக்காட்சிகள் பலவும் மறு ஒளி பரப்பு எபிசோட்டுகளை போட்டு விடுகின்றன. அதே சமயம், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதனை நெட்ஃபிளிக்ஸ் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையில் இந்த ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் தொடர்கள் குறித்து முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ‘”இந்த ஸ்ட்ரீமிங் தளங்களின் கையில் எடுத்த சமாச்சாரங்கள் சில நாட்களில் சலிப்பூட்டுகின்றன. எல்லா தொடர்களும் ஒரே இருண்ட கதைகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைப் பார்த்த பிறகு அவர்கள் […]

Read More

கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வரவில்லை

by on April 11, 2020 0

கொரோனாவை விரைவாக கண்டறிவதற்காக பத்து லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியா வாங்குவதாக முடிவெடுத்தது. இந்தக் கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகளைக் கண்டறிய முடியும்,. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு லட்சம் கருவிகள் வருவதாக இருந்தது. திட்டப்பட்டி நேற்று இந்த கருவிகள் தமிழகம் வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. இது குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:- “ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை. கருவிகள் […]

Read More

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவை கூட்டம்

by on April 10, 2020 0

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர்களும் […]

Read More

நட்சத்திர ஓட்டலை மருத்துவப் பணியாளர்கள் தங்க இலவசமாகக் கொடுத்த பாலிவுட் நடிகர்

by on April 10, 2020 0

அருந்ததி, சந்திரமுகி, ஒஸ்தி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர் பிரபல இந்தி நடிகர் சோனு சுத். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல விருதுகளை பெற்றவர் இவர். சமீபத்தில் டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். இந்த துயர சம்பவத்தை அடுத்து சோனு சுத் தனது ஸ்டார் ஹோட்டலை கொரோனாவுக்காக திறந்து விட்டுள்ளார். மருத்துவர்கள் செவிலியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கொரோனாவுக்கு எதிராக உழைத்து வருகின்றார். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை […]

Read More