May 14, 2024
  • May 14, 2024
Breaking News

Monthly Archives: April 2020

லாக் டவுன் மத்தியிலும் பர பரப்பாகும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

by on April 17, 2020 0

லாக் டவுன் முடிந்து எப்போது சினிமா படப் பிடிப்புகள் தொடங்கும் என்று தெரியாத நிலையிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு தேர்தல் ஜூன் மாதம் நடக்கப் போகிறதாம். இதை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தேர்தல் அட்டவணையையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி 11.05.2020 காலை 10 மணி முதல் […]

Read More

அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோக்களை விளாசும் டான்ஸ் மாஸ்டர் வைரல் வீடியோ

by on April 17, 2020 0

கொரோனா லாக்டவுன் அறிவிக்கப் பட்ட உடனேயே முன்வந்து அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோ க்களையே சவுக்கெடுக்காமல் விளாசி தள்ளி இருக்கிறார் ஆந்திர சினிமாவில் 40 ஆண்டுகாலம் நடிக நடிகையரை ஆட்டுவித்த டான்ஸ் மாஸ்டர் ராகேஷ். தெலுங்கு ஹீரோக்கள் மொத்தமாக சுமார் 25 கோடிக்கு மேல் பிரதமர், முதமைச்சர் நிதிக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு பட உலகுக்கும் உதவி இருக்கிறார்கள். அதற்குப்பின் வந்தாலும் பாலிவுட் ஹீரோக்கள் வாரிக் கொடுத்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், தெலுங்கு நடிகர்களின் உதவி ஒன்றும் […]

Read More

உள்ளுக்குள் சோகம் வைத்து உலகை சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்

by on April 16, 2020 0

உலகையே சிரிக்கவைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் இவைதான் அவரின் நண்பர்களாக இருந்தது. 1889 ஆம் ஆண்டு லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து டிவோர்ஸ் ஆகிவிடவே, பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக்கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் […]

Read More

ஒரே நாளில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 2600 கொரோனா பலி

by on April 16, 2020 0

உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி தொற்றான ‘கொரோனா வைரஸ்’ தாக்கத்தால் இதுவரை 20 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 28,529 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து […]

Read More

இந்திய கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் – தமிழகம் முதலிடம்

by on April 16, 2020 0

இந்தியா முழுவதும் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் அறிவிப்பு; தமிழகத்தில் 22 மாவட்டங்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாநிலங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன. நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்கள் வெள்ளை மண்டலமாகவும், 353 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் […]

Read More

ராகவா லாரன்சின் பெரிய உள்ளம் குறித்து டி ராஜேந்தர் நெகிழ்ச்சி கடிதம்

by on April 16, 2020 0

வணக்கம்… நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்கு சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவித் தொகையை வழங்க ஒரு நிதி திரட்ட திட்டம் தீட்டி வைத்திருந்தோம். அந்த திட்டத்தை மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தோம். அதன் தொடக்கமாக ஒரு தொகையை வழங்க […]

Read More

கேரளா உல்லாச படகுகள் கொரோனா மருத்துவ வார்டுகள் ஆகின்றன

by on April 15, 2020 0

கேரளாவில் கொரோனா வார்டுகளாக சுற்றுலா படகுகளை மாற்றியமைக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உலக அளவில், அதிகப்படியாக பரிசோதனைகள் நடத்தி, கொரோனா வைரஸ் பரவலை தட்டையாக மாற்றியதில், வட கொரியாதான் நம்பர் 1 தேசம். அப்படியான சோதனைகளை கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு முன்னெடுத்தது. எனவேதான், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், அதிகமாக வந்து கொண்டிருந்தது. பரிசோதனைகளை பரவலாக்காதவரை, பாதிப்பின் முழு அளவு எப்படி தெரியும் என்பதே, கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்தோர் கருத்தாக இருந்தது. கேரளாவில் […]

Read More

விஜய் தேவரகொண்டா செய்த வித்தியாசமான செயல்

by on April 15, 2020 0

கோலிவுட் ஹீரோகளில் ஒரு கை விரல்களில் உள்ள எண்ணிக்கையில் கூட அரசுக்கு நிவாரணத்தொகை கொடுக்க வில்லை என்பது தனி விஷயம்.. ஆனால் ஆளாளுக்கு பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, அட்வைஸ் செய்து கடுப்பேற்றி வருகிறார்கள். தெலுங்கில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. சில வருடங்களாக முன்னணி தெலுங்கு நடிகராக வலம் வரும் இவருக்கு ஆந்திரா முழுவதும் ரசிகர் ரசிகைகள் ஜாஸ்தி. பெண் ரசிகைகள் இவருக்கு மிகவும் அதிகம். இவர் நடிக்கும் படங்கள் பெருமபாலும் வெற்றி பெற்று வருவதால் […]

Read More