June 12, 2024
  • June 12, 2024
Breaking News

Monthly Archives: June 2019

போக்குவரத்து துறையின் அவலங்களை முன்வைக்கும் தோழர் வெங்கடேசன்

by on June 30, 2019 0

காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் சார்பில் மாதவி அரிசங்கர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தோழர் வெங்கடேசன்’. அறிமுக நடிகர் அரிசங்கர் ஹீரோவாகவும், மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள், எந்தவித தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் ‘தோழர் வெங்கடேசன்’ அரசு போக்குவரத்து […]

Read More

உலகின் ஆபத்தான 7 சிகரங்களில் ஏறி இந்திய பெண் ஐபிஎஸ் அதிகாரி சாதனை

by on June 30, 2019 0

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அபர்ணா குமார் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். நாற்பத்தைந்து வயதான இவர் இரு குழந்தைகளின் தாயாக இருக்கும் நிலையிலும் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 2014-ம் ஆண்டில் மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவாலான முயற்சியில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதத்தில் அண்டார்டிகாவில் உள்ள மலைச் சிகரத்தை மைனஸ் 37 […]

Read More

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை கைவிட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

by on June 30, 2019 0

மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டத்தைக் கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து… “ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்கே மாநில அரசுகளும், மாநில அரசியல் கட்சிகளும், கற்றறிந்தோர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இப்போது மீண்டும் ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’, ‘மாநிலங்களில் பணியாற்றும் மாஜிஸ்திரேட்டுகளைக் கூட மத்திய அரசே தேர்வு செய்யும்’ என்றும், எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்ப்பதைப் போல, அறிவித்து, […]

Read More

அருவி அருண் பிரபு இயக்க சிவகார்த்திகேயன் தயாரிக்கும் வாழ்

by on June 29, 2019 0

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது.   தொடர்ச்சியாக விதிவிலக்கான திரைப்படங்களை தயாரிக்கும் லட்சிய உந்துதலுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், தற்போது அதன் மூன்றாவது முயற்சியான ‘வாழ்’ என்ற படத்தை […]

Read More

தமிழ் தேசிய குறியீட்டுப்படம் நான்கு கில்லாடிகள்

by on June 29, 2019 0

குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்”, “வானவராயன் வல்லவராயன்”, “ருக்குமணி வண்டிவருது”, படங்களுக்கு பிறகு காக்டெயில் சினிமாஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் இராஜமோகன் இயக்கும் புதிய படம் “நான்கு கில்லாடிகள்”. இது ஒரு தமிழ் தேசிய குறியீட்டு படமாக உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு கதையை இராஜமோகன் மற்றும் சிவக்குமார் இணைந்து எழுத, இராஜமோகன் திரைகதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தேனி, இடுக்கி, பெரியகுளம், மூனாறு, ஆகிய இடங்களில் நடந்துமுடிந்தது. இப்படத்தின் இரண்டாம்கட்ட […]

Read More

இசை பயணத்தை தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

by on June 29, 2019 0

இசைப்புயலின் இசை வாரியான ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான ‘சகோ’வை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு அமீனின் தந்தை இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன். […]

Read More

ஜீவி திரைப்பட விமர்சனம்

by on June 28, 2019 0

சமீப காலமாக சில கிரைம் த்ரில்லர் படங்கள் வருகின்றன. அவையெல்லாமே ஹீரோ அடிக்கும் ஒரு கொள்ளையை போலீஸ் பிடியிலிருந்து எப்படி தப்பித்து மீட்பது என்கிற அளவிலேயே அமைந்து அவை திருட்டுக்கும், புரட்டுக்கும் துணை போவதாகவே அமைந்திருக்கின்றன. இந்தப்படமும் முதல் பாதியில் அப்படியே கடக்கிறது. அதனாலேயே இன்னொரு களவு கற்பிக்கும் கதையா என்று தோன்றுகிறது. ஆனால், பின்பாதியில் அப்படியே ஒரு மாற்றம்… வாழ்க்கையில் நம் செயல்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடன் இருப்பதாக ஒரு கோட்பாட்டைச் சொல்லி நம்மை ஆச்சரியத்தில் […]

Read More

20 வருடங்களுக்கு பின் டப்பிங் பேசிய அரவிந்த்சாமி

by on June 28, 2019 0

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக டிஸ்னி இந்தியா, தலைமுறைகள் தாண்டியும் தன் அபார நடிப்பிற்காக மதிக்கப்படும் அரவிந்த்சாமி, ‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் ‘ஸ்கார்’ கதாபாத்திரத்திற்கு […]

Read More

ஓட்டகத்தின் 100 நாள் கால்ஷீட் – பக்ரீத் விக்ராந்த்

by on June 27, 2019 0

‘எம்10 புரொடக்‌ஷன்’ (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்க உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ‘ரோகித் பதாக்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் […]

Read More