April 29, 2024
  • April 29, 2024
Breaking News

Monthly Archives: August 2018

கலைஞர் ஒரு ‘ஆண் தேவதை’யாக ஆசீர்வதிப்பார்..!

by on August 10, 2018 0

சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான ‘ஆண் தேவதை’ படத்தின் இசை வெளியீடு இன்று 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழின தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாக கூடி முடிவு செய்தனர். இது குறித்து ‘ஆண் தேவதை’ திரைப்படத்தின் திரை அரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர். எஸ். எம். பிலிம் […]

Read More

மணியார் குடும்பம் விமர்சனம்

by on August 9, 2018 0

வாழ்ந்து கெட்ட ஒரு பரம்பரையின் வாரிசான அப்பாவி கிராமத்துப் பெரிய மனிதரான ‘தம்பி ராமையா’ தன் மகன் ‘உமாபதி ராமையா’வையும் அவ்வாறே பொறுப்பில்லாமல் வளர்க்கிறார். அதனால், உமாபதியின் முறைப்பெண்ணைக் கட்டிவைப்பதில் கூட சிக்கல் வருகிறது. அங்கே சுதாரித்து அந்த முறைப்பெண்ணான மிருதுளா முரளியின் ஆலோசனைப்படியே ஒரு பங்குத் தொழில் தொடங்க நினைத்து மக்களிடம் பணம் வசூலிக்க, அதை கால்டாக்ஸி டிரைவரான ‘மொட்ட ராஜேந்திரன்’ ஆட்டையைப் போட, நல்ல மனிதர் பெயரெடுத்த ராமையாவின் குடும்பத்தினர் கெட்ட பெயரெடுத்து அல்லல் […]

Read More

மக்கள் நலன், சமூக நீதிக்காக வாழ்வை அர்ப்பணித்த தலைவருக்கு அஞ்சலி – பிரதமர் மோடி

by on August 8, 2018 0

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜி மண்டபம் வந்தார். அப்போது கலைஞரின் துணைவியார் ராசாத்தி அம்மாள், மகன் மு.கஸ்டாலின், மகள் கனிமொழியை சந்தித்து ஆறுதல் கூறினார். கருணாநிதியின் மரணச் செய்தி வெளியான நேற்றே அவருக்குப் புகழாரம் சூட்டி தன் ட்விட்டர் பக்கம் மூலம் மோடி வெளியிட்ட இரங்கல் செய்திகளின் தொகுப்பு… “கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் […]

Read More

ஐந்து முறை தமிழக முதல்வர்… சமூக நீதிக்காகப் போராடியவர் கலைஞர் – முதல்வர் புகழாரம்

by on August 7, 2018 0

இன்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- “தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பள்ளிப் பருவத்தில் […]

Read More

கலைஞர் மறைந்தார் – ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு

by on August 7, 2018 0

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இந்தியாவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்ந்லக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 11 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். அகில இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கேரள ஆந்திரா, மாநில முதல்வர்கள், திரை […]

Read More

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

by on August 6, 2018 0

‘தமிழ்நாட்டில் எல்லோரும் வாழலாம். ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்…’ என்ற ஆரோக்கியமான சிந்தனையுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் யுரேகா. ஆனால், அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறாரா என்பதுதான் ஆகப்பெரிய கேள்வி. தன் போக்கில் போகக்கூடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘காளி’தான் ஹீரோ. அதன் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் அவரிடம் நகரைக் கலக்கும் ‘சைக்கோ’ ஒருவனைப் பிடிக்கும் பொறுப்பை போலீஸ் கமிஷனர் ஒப்படைக்கிறார். இவரே கோக்குமாக்கான ஆளாக இருக்க, அந்தப் பொறுப்பை அவர் நிறைவேற்றினாரா என்கிற கதை. காட்டாற்று […]

Read More