June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: August 2018

விஜய் சேதுபதி த்ரிஷா நடிக்கும் 96 விரைவில் வெளியாகிறது

by on August 31, 2018 0

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘96 என்ற படத்தை தயாரித்திருக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார் . மற்றும் ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம் இசை – கோவிந்த் மேனன் எடிட்டிங் – கோவிந்தராஜ் கலை […]

Read More

ஒரே படத்தில் தமிழுக்கு வரும் அமிதாப்… இந்திக்குப் போகும் எஸ்.ஜே.சூர்யா

by on August 31, 2018 0

‘திருச்செந்தூர் முருகன் புரடக்‌ஷன்ஸ்’ சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ‘ஃபைவ் எலிமென்ட்ஸ் பிக்சர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் மிக பிரமாண்டமான படத்துக்கு “உயர்ந்த மனிதன்” என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்தப்படத்தின் சிறப்பம்சமே இதில் இந்திய பட உலகின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ‘அமிதாப் பச்சன்’ முதல்முறையாக தமிழில் நடிப்பது. அவருடன் இந்தப்படத்தின் இணைந்து நடிப்பது எஸ்.ஜே.சூர்யா. இதே படத்தின் மூலம் இந்தியில் பிரவேசிக்கீறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க பட உள்ளது. […]

Read More

ஆடத் தெரிந்த பிரபுதேவாவை இயக்கும் ஆட்டக்காரர்

by on August 30, 2018 0

‘தூத்துக்குடி’ மற்றும் ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘தேள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘நெடுஞ்சாலை’ உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பொன் பார்த்திபன் மற்றும் […]

Read More

நீட் தேர்வு விவகாரம் – சி.பி.எஸ்.சி க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

by on August 30, 2018 0

நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை தொடர்ந்து விசாரித்தது. இதற்கிடையே, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. […]

Read More

மக்கள் நல இயக்கம் அரசியலுக்காக அல்ல – கொடியை அறிமுகம் செய்து பேசிய விஷால்

by on August 29, 2018 0

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் நூறாவது நாளான இன்று தன்னுடைய பிறந்தநாளையும் ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களின் முன்னிலையில் தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றினார். அத்துடன் மக்கள் நல இயக்கத்துக்கான கொடியையும் அறிமுகம் செய்து உரையாற்றினார் விஷால். அதிலிருந்து… “உங்களில் ஒருவனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல – உங்களுடைய வெற்றி. நடிகனாக நன்றாக சம்பாதித்து நாமும்,நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்று […]

Read More

சந்திராயன் 2 ஜனவரி 3-ல் விண்ணில் செலுத்தப்படும்

by on August 29, 2018 0

மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்குடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி சந்திராயன்-2 செயற்கை கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 […]

Read More

தனி ஒருவன் 2 – கட்டாயத்துக்குள்ளான இயக்குநர் மோகன்ராஜா

by on August 28, 2018 0

தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவத்தைத் தந்த ‘தனி ஒருவன்’ இன்று 3-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ‘ஹாஷ் டேக்’ ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாக தனி ஒருவனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் இயக்குனர் மோகன்ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறார்கள். ஆம், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ‘தனி ஒருவன் 2’ படம் மிகப்பெரிய கூட்டணியுடன் விரைவில் ஆரம்பமாகிறது. இந்த உற்சாகமான […]

Read More

நீங்கள் முதல்வரானால் உங்கள் முதல் கையெழுத்து? – கமல்ஹாசன் பதில்

by on August 27, 2018 0

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் ஒரு நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அந்நிகழ்வில் அவர் “அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்..!” என்றார். நிகழ்வின் ஒரு பகுதியாக நடிகர் பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அதில் “முதலமைச்சரானால் உங்களுடைய […]

Read More

போட்டியின்றி திமுக தலைவராகும் மு.க.ஸ்டாலின் – கனிமொழி வாழ்த்து

by on August 26, 2018 0

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தபடி இன்று நடைபெற்றது. இதில் இதுவரை செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல, […]

Read More