1984 ஆம் ஆண்டு ஜனவரி 4 ந்தேதி பிறந்த ஜீவா கோலிவுட்டில் அறிமுகம் ஆகி 17 வருடங்கள் ஆகின்றன. அதை ஒட்டி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.
இன்னிய தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவாவின் இயற்பெயர் அமர்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இவரது தந்தை. நடிகர் ஜித்தன் ரமேஷ் இவரதுசகோதரர். ஜீவாவுக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவி இருக்கிறார்.
தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மகன் எனும் அடையாளத்தோடு, ஆசை ஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜீவா.
இன்றைக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பின் மகிழ்ச்சியில் மூழ்கி கிடக்கும் அவரிடம் பேச்சுக் கொடுத்த போது ,’18 வயதில் நான் சினிமாவுக்கு வந்து, இப்போ 17 ஆண்டுகள் ஆச்சா?” என்று வியக்கிறார்
தொடர்ந்து பேசும் போது“தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக ‘SGF 90’ படத்தில் நானும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்க படபிடிப்பு விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பட டைட்டில் கூடிய சீக்கிரம் வெளியிடப்படும். இந்தியில் “1983 வேர்ல்ட் கப் ” என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறேன். ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி. பாகுபலி எப்படி ஸ்கிரீனில் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியதோ அதுபோல் இந்த படமும் இருக்கும்.
100 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கின்ற படம் இது. கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று. நிறைய போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறேன். அப்படிப் பட்ட எனக்கு கிடைத்த முதல் ஹிந்தி படமே கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
1983ல் இந்தியா வேர்ல்ட் கப் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம். கிட்டத்தட்டி 100 நாள் லண்டனில் ஷுட்டிங் நடைபெறவுள்ளது. அப்போது அந்த டீமில் இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். நான் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கின்றது எனக்கு பெருமை.
தமிழ் நாட்டு வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் மொத்தம் நான்கு பேர் தான். அந்த கேரக்டர் எனக்கு கிடைத்தது பெருமையான விஷயம் . மே மாதம் லண்டனில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. லகான், M.S.தோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது” அப்படீன்னர்ர்.
கூடவே ,”நான் நிறைய தடவை ஹேப்பியா இருக்கும் போது – -புரியுதா? போலீசாரிடம் சிக்கி இருக்கேன். அப்பெல்லாம் ஏகப்பட்ட பொய்யான காரணங்களை சொல்லி சென்றுவிடுவேன். உதாரணத்திற்கு அம்மாவிற்கு உடம்பு முடியவில்லை, ஷூட்டிங்கு லேட்டாகுது, போன்ற காரங்களை கூறி சென்று விடுவேன் என்று கூறியுள்ளார்.
ஒரு போதும் druken Drive கேசில் இதுவரை மாட்டுனது கிடையாது என்றும் வெளிப்படையாக தெரிவிச்சிருந்தார் ஜீவா.
சினிமாவில் அறிமுகமான கால கட்டத்தில் வழக்கமான திரைப்படங்களிலேயே நடித்து வந்த ஜீவா, பின்னர் மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அமீர் இயக்கிய ராம், ஜனநாதன் இயக்கிய ஈ, இயக்குநர் ராம் இயக்கிய கற்றது தமிழ் போன்ற படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த பிறகு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.
இதில், 2005ஆம் ஆண்டு வந்த ராம் திரைப்படம், சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ஜீவாவுக்கு பெற்றுத் தந்தது.
வாழ்த்துக்கள் ஜீவா..!