October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கே ஜி எஃப் 2 நாயகன் யஷ்ஷுக்கு மும்பையில் 100 அடி உயர கட் அவுட்
April 13, 2022

கே ஜி எஃப் 2 நாயகன் யஷ்ஷுக்கு மும்பையில் 100 அடி உயர கட் அவுட்

By 0 559 Views

ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘கே ஜி எஃப் 2’ படத்தை காண்பதற்காக ரசிகர்களை திரையரங்குக்கு கவர்ந்திழுக்கும் வகையில் இப்பட நாயகனுக்கு 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள்.

ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘கேஜிஎப் சாப்டர் 2’ படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது.

இந்த படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தி திரை உலக ரசிகர்களை கவர்வதற்காக குறிப்பாக மும்பை மக்களை கவர்வதற்காக பட குழுவினர் அந்த மாநகரத்தில் அமைந்திருக்கும் கார்னிவல் சினிமாஸ் என்ற திரைப்பட வளாகத்தில்100 அடி உயரத்தில் படத்தின் நாயகனான ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு பிரமாண்டமான கட் அவுட்டை வைத்திருக்கிறார்கள்.

ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் பிரம்மாண்டமான கட் அவுட்டை மும்பைவாசிகள் அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள். அதனை வீடியோவாகவும், செல்ஃபியாகவும் எடுத்து தங்களது இணையப்பக்கத்திலும், சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக ‘ராக்கிங் ஸ்டார்’ நடிப்பில் வெளியாகும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ முதல் நாளன்று வசூல் சாதனை படைக்கும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே இந்தி திரை உலகில் முதன் முதலாக நடிகர் ஒருவருக்கு 100 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.