August 29, 2026
  • August 29, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என்னை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடந்தால் நான் பொறுப்பில்லை – யுவன் திடீர் அறிக்கை
January 24, 2021

என்னை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடந்தால் நான் பொறுப்பில்லை – யுவன் திடீர் அறிக்கை

By 0 652 Views

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன்சங்கர்ராஜா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசை நிறுவனத்தை கொஞ்ச காலம் முன்பு தொடங்கினார்.

அவரது முதல் தயாரிப்பாக ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் வெளியானது.

அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘மாமனிதன் ‘, ரைசா வில்சன் நடிப்பில் ‘ஆலிஸ்’ உள்ளிட்ட ஒரு சில படங்களைத் தயாரித்தார்.

இதில் ‘மாமனிதன்’ திரைப்படத்தை பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்ததால் அத்திரைப்படம் வெளியாவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யுவன், தன் நிறுவனங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை , “நான் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை.

அப்படி என் பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ யாராவது பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

என்னைத் தவிர ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பணப்பரிவர்த்தனை செய்ய அதிகாரம் இல்லை. எனது நிறுவனங்களின் சார்பில் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்…”

ஏதோ பிரச்சினை என்பது மட்டும் புரிகிறது. வரும் நாள்களில் இது என்ன பிரச்சினை என்பது வெளியாகலாம்.